பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

முதுமக்கள் அன்றி முனிதக்கா ராயபொதுமக்கள் பொல்லா ஒழுக்கம் - அதுமன்னும்குறைத்து வீழும் கொடியருவி நன்னாட
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்


முதுமக்கள் அன்றி முனிதக்கா ராய
பொதுமக்கள் பொல்லா ஒழுக்கம் - அதுமன்னும்
குறைத்து வீழும் கொடியருவி நன்னாட
மன்றத்து மையல்சேர்ந்த தற்று. (பாடல்-209)

நிலைபெற்ற குன்றுகளினின்றும் வீழும் மின்னுக்கொடி போன்று விளங்கும் அருவிகளை உடைய நல்ல நாடனே! அறிவிற் சிறந்த சான்றோர் அல்லாமல், வெறுக்கத்தக்கவராகிய பொதுமக்களது பொல்லாத ஒழுக்கமாகிய அது, மன்றத்திலே நின்றபோது பித்தேறியது போன்றதாகும். பித்தேறியவர்களைக் கண்டு மன்றத்தார் யாவரும் அஞ்சி ஒதுங்குவதுபோல, சான்றோரும் கீழோரின் பொல்லாங்குகளைக் கண்டு அவரை விட்டு அஞ்சி விலகுவர். "மன்றத்து மையல் சேர்ந்த தற்று' என்பது பழமொழி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com