மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அறிவன்று அழகன்று அறிவதூஉம் அன்றுசிறியர் எனப்பாடும் செய்யும் - எறிதிரைசென்றுலாம் சேர்ப்ப! குழுவத்தார் மேயிருந்த

News image
Updated On :20 ஜூன் 2021, 4:02 pm

தினமணி


அறிவன்று அழகன்று அறிவதூஉம் அன்று
சிறியர் எனப்பாடும் செய்யும் - எறிதிரை
சென்றுலாம் சேர்ப்ப! குழுவத்தார் மேயிருந்த
என்றூடு அறுப்பினும் மன்று. (பாடல்-207) 


காற்றினாலே மோதி எறியப்படும் அலைகள் கரைமேற் சென்று உலவிக் கொண்டிருக்கும் கடற்கரைகளுக்கு உரிய தலைவனே! சூரியனையே ஊடறுத்துச் சென்றாலும் செல்லலாம். ஆனால், அறிஞர்கள் கூடியிருக்கிற அவையை ஊடறுத்துப் போகவே கூடாது. அப்படிப் போவது அறிவுடைமையும் அன்று; பிறந்த குடிக்கு அழகும் அன்று;  அறநெறியின்பாற் பட்டதும் அன்று. கீழ்மக்கள் என்று சொல்லப்படுகின்ற சொல்லையே அது கொண்டு வரும். "குழுவத்தார் மேயிருந்த என்றூடு அறுப்பினும் மன்று' என்பது பழமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.