மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

கற்றாற்று வாரைக் கறுப்பித்துக் கல்லாதார்சொற்றாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் - எற்றெனின்தானும் நடவான் முடவன் பிடிப்பூணி

News image
Updated On :7 மார்ச் 2021, 4:24 pm

தினமணி

கற்றாற்று வாரைக் கறுப்பித்துக் கல்லாதார்
சொற்றாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் - எற்றெனின்
தானும் நடவான் முடவன் பிடிப்பூணி
யானையோ டாடல் உறவு. (பாடல்- 192)


கற்று வல்லவர்களான பெரியோரைச் சினங்கொள்ளச் செய்து கல்லாதவர்கள் சொற்களைக் கொழித்துக்கொண்டு மனவெழுச்சியுடன் எழுதல் எதுபோன்ற தென்றால், தானும் நடக்காத முடவன் ஒருவன், தன்னுடைய பிடிப்பை ஊணிக்கொண்டு சென்று, யானையோடு உறவாடுதலைப் போன்றதாகும். "முடவன் பிடிப்பூணியானையோ டாடல் உறவு' என்பது பழமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.