

உடைப்பெருஞ் செல்வத்து உயர்ந்த பெருமை
அடப்பமில் உள்ளத்தன் ஆகி - நடக்கையின்
ஒள்ளியன் அல்லான்மேல் வைத்தல், குரங்கின்கைக்
கொள்ளி கொடுத்து விடல். (பாடல்-200)
அடக்கம் இல்லாதவனாகிய ஒருவன் நடத்தையிலும் தூய்மை இல்லாதவனாகவே இருப்பான். உடைமையாகிய பெரும் செல்வத்தால் வரும் உயர்ந்த சிறப்புகளை எல்லாம் அத்தகைய ஒருவன்பால் வைப்பது தகாது. அது குரங்கின் கையிலே கொள்ளியைக் கொடுத்து அனுப்புவது போன்ற அறியாமையான செயலாகும். "குரங்கின்கைக் கொள்ளி கொடுத்து விடல்' என்பது பழமொழி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.