

சிறிதாய கூழ்பெற்றுச் செல்வரைச் சேர்ந்தார்
பெரிதாய கூழும் பெறுவர்-அரிதாம்
இடத்துள் ஒருவன் இருப்புழிப் பெற்றால்
கிடப்புழியும் பெற்று விடும். (பாடல்-235)
வாய்ப்பதற்கு அரியதான ஓர் இடத்தினுள்ளே, முதலில் ஒருவன் இருப்பதற்கு இடம் பெற்றுவிட்டான் என்றால் அடுத்து, அவன் படுப்பதற்கான இடத்தையும் அங்கேயே பெற்றுவிடுவான். அதுபோலவே, முதலில் சிறிதளவான ஊதியம் பெற்று, செல்வரைச் சேர்ந்தவர்கள், விரைவிலே பெரிதளவான ஊதியத்தையும் அவரிடமிருந்து பெறுவார்கள். "இருப்புழிப் பெற்றால் கிடப்புழியும் பெற்று விடும்' என்பது பழமொழி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.