பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
கொல்கின்ற முறைப்படியே கொன்ற பின்னர் அல்லாது, மானின் தசையைத் தின்ன நினைப்பவன், அதைத் தப்பிப்போக விட்டுவிட்டு, அந்த எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வதில்லை.


அன்பறந்த பின்னல்லால் யார்யார்க்கும் தம்மறையே
முன்பிறர்க் கோடி மொழியற்க- தின்குறுவான்
கொல்வாங்குக் கொன்றபின் அல்லதுஉயக்கொண்டு
புல்வாய் வழிப்படுவார் இல். (பாடல்-257)
கொல்கின்ற முறைப்படியே கொன்ற பின்னர் அல்லாது, மானின் தசையைத் தின்ன நினைப்பவன், அதைத் தப்பிப்போக விட்டுவிட்டு, அந்த எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வதில்லை. அதுபோலவே, ஒருவர் உள்ளத்திலே நிலவும் அன்பின் தகுதியை அறிந்த பின்னர் அல்லாமல் யாரும், யார்க்கும் தம்முடைய ரகசியத்தை முன்னதாகவே ஓடிச்சென்று சொல்லாது இருப்பாராக. "உயக்கொண்டு புல்வாய் வழிப்படுவார் இல்' என்பது பழமொழி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...