வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

வெயிலின்கண் காயவைத்த வற்றலைப் பார்த்துக் கொண்டிருப்பவர் இமைகொட்டும் அளவு நேரத்தினுள்ளும், தம் பார்வையிலே பட்டதென்றால் அதனைப் பறவைகள் திருடிச் சென்றுவிடும்.

News image
Updated On :19 ஜூன் 2022, 5:21 pm IST


நோக்கி யிருந்தார் இமைக்கும் அளவின்கண்
நோக்கப் படினும் உணங்கலைப் புட்கவரும்
போற்றிப் புறந்தந் தகப்பட்ட ஒண்பொருட்கும்
காப்பாரிற் பார்ப்பார் மிகும். (பாடல்}259) 


வெயிலின்கண் காயவைத்த வற்றலைப் பார்த்துக் கொண்டிருப்பவர் இமைகொட்டும் அளவு நேரத்தினுள்ளும், தம் பார்வையிலே பட்டதென்றால் அதனைப் பறவைகள் திருடிச் சென்றுவிடும். அதுபோல போற்றிப் புறந்தந்து, சேர்த்துவைத்த சிறந்த பொருள்களுக்கும், அதனைக் காப்பவரைவிட,  திருடப் பார்ப்பவர்களே அதிகமாகும்.  "காப்பாரிற் பார்ப்பார் மிகும்' என்பது பழமொழி. (பார்ப்பார்} தாம் கைக்கொள்ளப் பார்ப்பவர்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.