வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

சுருண்டு தழைத்ததும், ஐம்பகுதியாக முடிப்பதுமான கூந்தலை உடையவளே! அப்பம் தின்பவர்கள் அதனைத் தம் கையிலே வாங்கி, அதிலுள்ள துளைகள் எவ்வளவு என்று எண்ணிக் கொண்டிருக்க மாட்டார்கள்.

News image
Updated On :8 மே 2022, 7:14 pm IST

நிலைஇய பண்பிலார் நேரல்லர் என்றொன்று
உளைய உரையார் உறுதியே கொள்க
வளையொலி ஐம்பாலாய் வாங்கி இருந்து
தொளையெண்ணார் அப்பந்தின் பார். (பாடல்-253)


சுருண்டு தழைத்ததும், ஐம்பகுதியாக முடிப்பதுமான கூந்தலை உடையவளே! அப்பம் தின்பவர்கள் அதனைத் தம் கையிலே வாங்கி, அதிலுள்ள துளைகள் எவ்வளவு என்று எண்ணிக் கொண்டிருக்க மாட்டார்கள். அதுபோல, "உறுதியாக நிலைபெற்ற பண்பில்லாதவர்கள் எல்லாம் நேர்மை உடையவர் அல்லர்' என்று, அவர்கள் மனம் புண்படும்படியாக ஒரு சொல்லைச் சொல்லாது, அவரிடமும்  பெற்றுக்கொள்ளக் கூடிய உறுதியான பயன்களை மட்டுமே பெற்றுக்கொண்டு இன்புற வேண்டும். "தொளையெண்ணார் அப்பந்தின் பார்' என்பது பழமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.