பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
தம்முடன் ஒத்த தகுதியற்ற பகைவரைத் தாமே எதிர்த்து அழிக்க முடியாதவராய் இருக்கலாம். அத்தகையவரும், அவர்களோடு பகை கொண்ட பிறர் சொல்லும் இகழ்ச்சியான சொற்களைக் கேட்டு மகிழ்ச்சி அடைவர்.


மாணாப் பகைவரை மாறொறுக் கல்லாதார்
பேணா துரைக்கும் உரைகேட்டு உவந்ததுபோல்
ஊணார்ந்து உதவுவதொன்று இல்லெனினும் கள்ளினைக்
காணாக் களிக்கும் களி. (பாடல்- 256)
தம்முடன் ஒத்த தகுதியற்ற பகைவரைத் தாமே எதிர்த்து அழிக்க முடியாதவராய் இருக்கலாம். அத்தகையவரும், அவர்களோடு பகை கொண்ட பிறர் சொல்லும் இகழ்ச்சியான சொற்களைக் கேட்டு மகிழ்ச்சி அடைவர். அதுபோலவே, உணவாக நிரம்பி ஒரு தகுதியும் இல்லை என்றாலும், கள்ளினைக் கண்ட உடனேயே குடிகாரனின் உள்ளமும் களிப்படையும். "கள்ளினைக் காணாக் களிக்கும் களி' என்பது பழமொழி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...