

முன்பெரிய நல்வினை முட்டு இன்றிச் செய்யாதார்,
பின் பெரிய செல்வம் பெறல் ஆமோ? வைப்போடு
இகலிப் பொருள் செய்ய எண்ணியக்கால், என் ஆம்?
முதல் இலார்க்கு ஊதியம் இல். (பாடல்: 312)
முன்னைய பிறவிகளில் நற்செயல்களைத் தடையில்லாமல் செய்தவர் மட்டும்தான் தொடர்ந்துவரும் பிறவிகளில் செல்வம் பெறுவர். அல்லாதார் பெறார். ஏனைய செல்வந்தர்க்கு நிகராகத் தானும் செல்வம் சேர்த்து வைப்போம் என்று நல்வினை செய்யாதார் எப்படிச் செல்வம் சேர்க்க முடியும். முதலீடு
செய்யாதவர்க்குக் கூலி இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.