மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உறவினரைப் பகுத்து அளிக்காதவன்: பழமொழி நானூறு பாடல் 366

News image
Updated On :7 ஜூலை 2024, 1:06 pm

Vishwanathan

பல் கிளையுள் பாத்துறான் ஆகி, ஒருவனை

நல்குரவால், வேறாக நன்கு உணரான் சொல்லின்,

உரையுள் வளவிய சொல் சொல்லாததுபோல்,

நிரையுள்ளே இன்னா, வரைவு. (பாடல்: 366)

தமக்கு வருவனவற்றைத் தம் உறவினர்க்குப் பகுத்து அளிக்காதவனாக இருந்து வறுமையை அடிப்படையாக வைத்து உறவையும் மனிதரையும் வேறுபடுத்தி நன்கு உணராது சொல்லுதல் சிறந்த சொற்பொழிவில் வளமான சொற்களைச் சொல்லாதது போலாகும். ஒரு கூட்டத்தில் ஒருவரை மட்டும் தனியே பிரித்துச் சரியாக ஆராயாமல் நல்லவர், கெட்டவர் என்று முடிவு செய்வது துன்பம் தருவதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.