மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது: சிபிஐ வலியுறுத்தல்!நான் முடி வெட்டிக்கொண்டால்கூட பிரச்னையா? - மேயர் பிரியா ஆதங்கம்!ஸ்குவாஷ் விளையாட்டில் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ. 60 லட்சம்! முதல்வர் அறிவிப்புஇன்று காஞ்சி காமாட்சியம்மன் கோயில் நடை அடைப்பு! பக்தர்கள் ஏமாற்றம்இன்ஸ்டாவில் தங்க, பணமழையை கொட்டிய பெண்! தட்டித் தூக்கிய திருடர்கள்!!வேலை நிறுத்தம் எதிரொலி! நாளை வழக்கம் போல வங்கிகள் செயல்படும்!நேபாளப் பெருவெள்ளம்: 85 தமிழர்களின் நிலை என்னவானது?மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!நுங்கம்பாக்கம் சாலைக்கு இயக்குநர் பாக்யராஜ் பெயர்

மனமுவந்து கொடுப்பதே பயன்தரும் ஈகை

புலன் வழியாக எழுகின்ற ஆர்வத் துடிப்புக்களை நிறைவேற்றிக் கொள்ளும் ஆற்றலுடைய இளமைப் பருவத்தினன், அந்த ஆர்வங்களை அடக்கி நடப்பதே மேலான அடக்கமாகும்.

Published On :

இளையான் அடக்கம் அடக்கம், கிளை பொருள்

இல்லான் கொடையே கொடைப்பயன்;-எல்லாம்

ஒறுக்கும் மதுகை உரனுடை யாளன்

பொறுக்கும் பொறையே பொறை.

(பாடல் 65 அதிகாரம்: சினம் இன்மை)

புலன் வழியாக எழுகின்ற ஆர்வத் துடிப்புக்களை நிறைவேற்றிக் கொள்ளும் ஆற்றலுடைய இளமைப் பருவத்தினன், அந்த ஆர்வங்களை அடக்கி நடப்பதே மேலான அடக்கமாகும்.

மென்மேலும் வளர்ச்சியடையும் பொருள்நிலை இல்லாத ஒருவன், தன்னிடம் உள்ளதையும் மனமுவந்து கொடுப்பதே உண்மையான பயன்தரும் ஈகையாகும். எல்லோரையும் வெற்றிகொள்ளத் தகுந்த உடல் வலிமையையும் உள்ள உறுதியையும் உடையவனாகிய ஒருவன், சினங் கொள்ளாமல், பிறர் தனக்குச் செய்த தீச்செயல்களைப் பொறுத்துக் கொள்ளும் பொறுமையே உண்மையான பொறுமையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.