தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

காஞ்சிபுரம் கருட சேவை

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் கருட சேவை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த கருட சேவையை கண்டு மகிழ்ந்து ஆழ்வார்கள் தனி மங்களாசாசனமே செய்துள்ளார்கள். கருட சேவையின் பொழுது அலங்கா

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:11 pm

ரஞ்சனா பாலசுப்ரமணியன்

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் கருட சேவை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த கருட சேவையை கண்டு மகிழ்ந்து ஆழ்வார்கள் தனி மங்களாசாசனமே செய்துள்ளார்கள். கருட சேவையின் பொழுது அலங்காரம் முடிந்து பெருமாள் புறப்படும் நேரத்தில் கருட சேவையை ஒரு விநாடி பொழுது திருக்குடைகளால் மறைப்பார்கள். இது இங்கு மட்டுமே நடைபெறும். இதற்கு ஒரு விநாடி தரிசனம் என்று பெயர்.

 இதற்கு காரணம் முற்காலத்தில் சோளிங்கர் நகரில் வாழ்ந்த தொட்டாச்சாரியார் என்னும் விஷ்ணு பக்தர் காஞ்சியில் நடைபெறும் அனைத்து கருட சேவைகளையும் தவறாது தரிசிப்பதை வழக்கமாகக்கொண்டிருந்தார்.

 இப்படி இருக்கையில் ஒரு கருட சேவை நடைபெறும் நாளன்று சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவரால் காஞ்சி செல்லமுடியவில்லை. அப்பொழுது அவர் மிகுந்த வேதனையுற்று சோளிங்கரில் இருந்தபடியே வரதராஜரை மனமுருக பிரார்த்தித்தாராம். அப்பொழுது தான் அந்த அதிசய நிகழ்வு நடந்தது, வரதராஜ பெருமாள் தன் பக்தனின் உண்மையான பக்திக்கு இரங்கி சோளிங்கரில் இருந்த தொட்டாச்சாரியாருக்கு ஒரு விநாடி பொழுது கருட சேவை தரிசனமளித்தாராம்.

 இதனை கருத்தில் கொண்டே இன்றும் கருட சேவை நடைபெறும் பொழுது கருட சேவையை திருக்குடைகளால் ஒரு விநாடி பொழுது மறைக்கிறார்கள். இவ்வளவு

 சிறப்புபெற்ற காஞ்சி கருட சேவையை

 தரிசிக்க நாமும் காஞ்சிபுரம் செல்வோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.