அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

நபி(ஸல்)களின் நேசம்!

மனிதர்களிடம் மட்டுல்ல, விலங்கினங்களிடமும் நேசத்தைக் காட்டியவர் உலகம் போற்றும் உத்தமர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். காட்டில் சுதந்திரமாகத் திரிந்த மான் கூட்டத்தில் ஒரு வேடன் நுழைந்தான். அந்த மான்களில்

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:53 pm

ஜி. அஹ்மது

மனிதர்களிடம் மட்டுல்ல, விலங்கினங்களிடமும் நேசத்தைக் காட்டியவர் உலகம் போற்றும் உத்தமர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

காட்டில் சுதந்திரமாகத் திரிந்த மான் கூட்டத்தில் ஒரு வேடன் நுழைந்தான். அந்த மான்களில் ஒரு ஆண் மான், ஒரு பெண் மான் இருந்தன. இரண்டு நாள்களுக்கு முன் அவற்றுக்கு மான் குட்டிப் பிறந்திருந்தது. வேடன் அம்பை எய்தபோது மான் கூட்டம் சிதறி ஓடியது. குட்டியை ஈன்ற பெண் மான் மட்டும் வேடன் கையில் சிக்கியது. அதைக் கட்டி இழுத்துக் கொண்டு வந்தான் வேடன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவ்வழியே வந்தார்கள்.

நபிகளாரைப் பார்த்து அந்தப் பெண் மான், ""என்னைக் காணாமல் என்னுடைய இனமான கலை ஆண் மான் எந்த அளவுக்குத் துன்பப்படுமோ...! எனவே என்னை விட்டுவிடச் சொல்க. நான் சென்று குட்டிக்கு பால் கொடுத்து, ஆண் மானிடம் நான் கட்டுண்ட கதையைச் சொல்லி மீண்டும் வருகிறேன்'' என்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த வேடனைப் பார்த்து, "'நீ அந்தப் பெண் மானை விட்டு விடு'' என்றார்கள். ஆனால், வேடனோ ""முடியாது'' என்றான். ""பிணையாக நான் வருவேனப்பா! நீ அந்த மானை விட்டுவிடு. நிச்சயம் திரும்பி வரும். அது திரும்பி வராத பட்சத்தில் நான் இருக்கிறேன். அதற்குப் பதிலாக இரண்டு மான்களை உனக்குத் தருகிறேன். குட்டிக்குப் பால் கொடுக்க வேண்டுமென்று குமுறுகிறது. எனவே அதை அனுப்பி வை'' என்று நபிகளார் நீண்ட நேரம் வாதாடிய பிறகு, ""சரி, போய் விரைவிலே வா'' என்று அந்தப் பெண் மானை வேடன் அனுப்பி வைத்தான்.

தன் குழந்தைக்குப் பால் கொடுத்துவிட்டு - பெண் மான் ஆண் மானிடத்திலே, ""நான் இப்படி உறுதியளித்துவிட்டு வந்திருக்கிறேன். எனக்குப் பதிலாக நபிகளார் அவர்கள் அங்கே பிணையாக இருக்கிறார்கள். நான் உடனே அங்கே செல்ல வேண்டும்'' என்றது. ""போகக்கூடாது'' என்று எல்லா மான்களும் கூறின.

""தலை சிறந்த ஒரு பெரியவராகிய நபிகளாருக்கு முன்னால் நான் அளித்த வாக்குறுதியை மாற்றி விட்டு இங்கே இருப்பதை விட ஒரு புலியின் வாயினால் கடிபட்டு சாவது மேல். உயிரோடு வாழ்வது மேலல்ல. வாக்குறுதி தவறி வாழ்வதை விடச் சாவது மேல்'' என்று அந்த மான் சொன்னதும், பிறகு குட்டியையும் அழைத்துக் கொண்டு வேடனிடத்திலே சென்றதும், வேடன் தன்னுடைய தவறுக்கு வருந்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலடியிலே விழுந்ததும், அவனை அவர்கள் ஏற்றுக் கொண்டதும் அந்தப் படலத்தினுடைய தொடர் நிகழ்ச்சிகள்.

இறைத் தூதர்களிடமும், இறையருள் பெற்ற இறை நேசச் செல்வர்களிடமும், பறவைகள், விலங்குகள் பேசிய வரலாறுகளை வேதங்களில் காணலாம். நேரிய வழியில் நெறி பிறழாது வாழும் விலங்கினங்களும் நேர்மை, நாணயம் தவறாது நடக்கும் என்பதையும் வாக்குறுதி மாறாது சொன்னதை சொன்னபடி செய்யும் என்பதையும் "சீறாபுராணம்' ஊரறிய உரைக்கிறது

நபிகள் நாயகம் (ஸல்)அவர்களின் வாழ்வில் நடந்த நயமான நிகழ்ச்சிகளை மகிழ்ச்சியாய் படிக்கும் வண்ணம் நெகிழ்ச்சியுடன் நினைவில் கொண்டு வந்து காட்சிப்படுத்தும் மாட்சிமையுடைய சீறாபுராணத்தை சீறுடன் படித்து செம்மை பெறுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.