இறைவன் பேசுகிறான்!
இஸ்லாமிய மார்க்கம் இனிமையானது. மக்கள் வழி தவறும் போதெல்லாம்,இறைவன் நபிமார்கள் மூலம் இஸ்லாமிய நெறியினை போதித்து நல்வழிப்படுத்துவான். இறுதியாக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால்தான் இஸ்லாமிய மார


இஸ்லாமிய மார்க்கம் இனிமையானது. மக்கள் வழி தவறும் போதெல்லாம்,இறைவன் நபிமார்கள் மூலம் இஸ்லாமிய நெறியினை போதித்து நல்வழிப்படுத்துவான். இறுதியாக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால்தான் இஸ்லாமிய மார்க்கம் முழுமையாக்கப்பட்டது. அரேபியா நாட்டின் "தாயிப் நகர மக்களுக்கு' நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அல்லாஹ் ஒருவனையே வணங்கும்படி ஏகத்துவத்தைப் போதித்து, இஸ்லாத்தில் இணையும்படி அழைப்பு விடுத்தார்கள். ஆனால், தாயிப் நகர மக்கள் கோபம் கொண்டு, நபிகளாரை சொல்லாலும், கல்லாலும் தாக்கி இன்னல்கள் பல விளைவித்தனர்.
இதனைக் கண்ட வானவர் தலைவர் ஜிப்ரயீல் (அலை), ""யா முஹம்மது (ஸல்) அவர்களே! உங்கள் மீது அவதூறு கூறி கல்லையும், மண்ணையும் வாரி இறைத்தவர்களை நசுக்கி விடவா?''
என்றனர்.
பொறுமையின் சிகரமான நபிகளார், ""அப்படி எதுவும் செய்துவிட வேண்டாம். இம்மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளா விட்டாலும், இவர்களுக்குப் பிறக்கின்ற சந்ததிகளாவது, அல்லாஹ் ஒருவனையே வணங்கி, அவனுக்கு இணை வைக்காது இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களாகத் திகழ்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது'' என்றனர்.
உமர் (ரலி) இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் 40 முஸ்லிம்களே இருந்தனர். உமர் (ரலி)யின் வருகையால் இஸ்லாத்தில் புதிய பொலிவும், முஸ்லிம்களுக்கு புதிய வலிமையும் ஏற்பட்டது.
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இரண்டாவது கடமையாகிய "தொழுகை'யைக் கூட பகைவருக்குப் பயந்து, மறைவாக நிறைவேற்றிக் கொண்டிருந்த முஸ்லிம்கள் வீரம் செறிந்த உமர் (ரலி) அவர்களின் துணையோடு பகிரங்கமாக நிறைவேற்றினர். இதை அறிந்து எதிரிகளான யஹூதிகள் எப்படியாவது முஸ்லிம்கள் ஒரே இறைவனை வணங்குவதைத் தடுத்த நிறுத்த வேண்டுமென்று துடித்தனர். ஆனால், உமர்(ரலி)இருக்கும் வரை யஹூதிகளால் ஒன்றும் செய்ய இயலவில்லை. எனவே முஸ்லிம்களுக்கு தனியாக தொல்லைகள் கொடுக்கத் தொடங்கி விட்டனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்கள் புடைசூழ, "மக்கா'வை விட்டு "மதீன'மாநகர் சென்று மகிழ்ச்சியுடன் எதிரிகளின் தாக்குதல்கள் இன்றி இஸ்லாமிய அரசை வழிநடத்தி வருகின்றார்கள். முஸ்லிம்கள் குதூகலத்துடன் வாழ்ந்து வரும் பொழுது அங்கே நன்மைகள் பூத்துக் குலுங்கின. எனவே, "நல்லாட்சி நடைபெற்றால் நாம் வாழ இயலாது' என்று கலங்கி பொறாமையால் புழுவாய்த் துடித்தான் "க அப் இப்னுல் அஷ்ரஃப்' என்ற யூதத் தலைவன்.
ஆனால் இஸ்லாமிய ஆட்சியைக் கவிழ்க்கத் திட்டம் தீட்டியது இயலாமல் போனது. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உற்ற நண்பரும், வீரத்தின் விளை நிலம் என்று போற்றப்படுபவருமான உமர் (ரலி)யை இழிவுபடுத்த எண்ணினான் க அப் இப்னுல் அஷ்ரஃப். ஆனால் உமர் (ரலி)யையும் ஒன்றும் செய்ய இயலவில்லை. நபிகள் நாயகம்(ஸல்) அவர்களால் ""உமருடைய நாவில் இறைவன் பேசுகிறான்'' என்று பாராட்டப்பட்டார் உமர் (ரலி).
""யார் இறைவனுக்கு அஞ்சுகிறாரோ அவரை இறைவன் (இங்கும் அங்கும்) துன்பங்களிலிருந்து பாதுகாக்கின்றான்'' என்கிறது அல்குர்ஆன்: 65:2,3.
உமர்(ரலி) அவர்கள் இரண்டாவது கலீஃபாவாக பொறுப்பேற்றது முதல், அவர்களது ஆட்சிக் காலம் உலக வரலாற்றில் போற்றப்படுவதாக அமைந்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...