அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

நல்லவைகளை எண்ணுவோம்!

ஓருவனிடம் "தற்பெருமை' குடிகொண்டால், அவன் எவரையும் மதிக்க மாட்டான். உண்மையை மறைக்க முயற்சி செய்வான். எனவே தற்பெருமை மனிதனை இறை நிராகரிப்பில்தான் தள்ளிவிடும் என்பதை நாம் உணர வேண்டும். ""எவனது உள்ளத்தில்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:25 am

ஜி. அஹ்மது

ஓருவனிடம் "தற்பெருமை' குடிகொண்டால், அவன் எவரையும் மதிக்க மாட்டான். உண்மையை மறைக்க முயற்சி செய்வான். எனவே தற்பெருமை மனிதனை இறை நிராகரிப்பில்தான் தள்ளிவிடும் என்பதை நாம் உணர வேண்டும்.

""எவனது உள்ளத்தில் கடுகளவு பெருமை உள்ளதோ அவன் சுவனம் புக மாட்டான்'' என நபிகள் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்.

"பெருமை' என்பது இறைவனுக்கு மட்டுமே சொந்தமானது என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிய வேண்டியது அவசியமாகும். அதில் எவர் பங்கு பெற எண்ணினாலும் இறைவன் எவரையும் மன்னிக்கவே மாட்டான்.

ஒருவன் உஹது மலை அளவு தங்கத்தை தான் தர்மம் செய்ததாகக் கருதி பெருமையடிப்பானேயானால், அம்மனிதன் செய்த தர்மத்தை இறைவன் ஏற்றுக்கொள்ளவே மாட்டான். தனது மனோ இச்சைப்படி நடப்பது, கஞ்சத்தனம் செய்வது, தற்பெருமை கொண்டு உலகில் வாழ்வது ஆகிய குணங்களைக் கொண்டோரை இறைவன் விரும்பமாட்டான்.

நபி மூஸô (அலை) அவர்கள் காலத்தில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தைக் காண்போம்.

"காரூன்' என்ற கொடியவன் நபி மூஸô (அலை) அவர்களின் சிறிய தந்தை மகனாவான். ஆரம்ப நாள்களில் இவன் நபி மூஸô (அலை) அவர்களை இறைத்தூதராக ஏற்று, "தௌராத்' வேதத்தை நன்கு பயின்று தேர்ச்சி பெற்றான். இவனுடைய ஏழ்மை நிலையைக் கண்டு மனம் இரங்கினார் நபி மூஸô(அலை). எனவே, இரும்பைப் பொன்னாக்கும் "சித்தை' இவனுக்குக் கற்றுக் கொடுத்தார். அதன் பயனாக காரூன் பெரும் செல்வந்தனாக ஆனான். இவனுடைய கரூவூலங்களின் திறவு கோல்களை மட்டும் வலுமிகுந்த பல பேர் சிரமத்துடன் சுமக்க வேண்டியிருந்தது என இறைவன் தனது திருமறையில் கூறுகின்றான். தம் செல்வப் பெருக்கைக் காட்டும் பொருட்டு, இவன், தான் செல்லுமிடமெல்லாம் அவற்றைக் கொண்டு செல்வான். இவனுடைய வள வாழ்வைக் கண்டு, ""காரூனுக்கு வழங்கப்பட்டது போன்று, நமக்கும் இறைவன் வழங்க மாட்டானா? நிச்சயமாக அவன் பெரும் பேறு பெற்றவன்'' என மக்கள் கூறிக் கொள்வர். இது போன்ற சொற்களை இக்காலங்களில்கூட பேராசைக்கொண்ட மக்கள் கூறுவதை நாம் கேட்கலாம்.

இவனுடைய செல்வ செழிப்பைக் கண்ட நபி மூஸô(அலை) அவர்கள், ""நீ "ஜகாத்'(ஏழை வரி) அளிக்கும் தகுதியை அடைந்துள்ளாய். எனவே இவ்வாண்டு முதல் "ஜகாத்' கொடுத்தே ஆக வேண்டும்'' எனக் கட்டளையிட்டார்கள். நல்லவை எதுவும் செய்வது என்பதெல்லாம் அவனுக்குப் பிடிக்காது. ஆகையால், நபி மூஸôவுக்கு எதிராக செயல்படத் தொடங்கினான். அவர் மீது அவதூறைப் பரப்பினான். ஆனால் அது பொய்யென்று நிரூபித்தார் நபி மூஸô(அலை). ""பூமி! காரூனைப் பிடி'' என்று கூறினார். அது இவனை சிறிது சிறிதாக விழுங்கிக்கொண்டு வந்தது. காரூன் ""என்னை மன்னித்தருளுங்கள்'' என எழுபது முறை அலறினான். எனினும் நபி மூஸô (அலை) மனம் இரங்கவில்லை.

இறுதியாக பூமி காரூனை முற்றிலுமாக விழுங்கிவிட்டது. எனவே, யார் ஒருவர் மனோ இச்சைப்படி நடப்பதும்,தான தர்மம் செய்யாது கஞ்சத்தனம் செய்வதும், தற்பெருமை கொண்டு உலகில் வாழ்வதுமாகிய மூன்று வித செயல்களை செய்கிறார்களோ இறைவன் அவர்களை மன்னிக்கவே மாட்டான். கொடியவன் காரூனுக்கு ஏற்பட்ட நிலையைத்தான் இறைவன் தண்டனையாக அளிப்பான் என்பதை உணர்ந்து, உலகில் தாம் வாழும் காலங்களில் நல்லவைகளையே எண்ணி செயல்

படுவோமாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.