அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

இறைவனுக்கு சொந்தம்!

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எளிமையே உருவானவர்கள் என்பது உலகறிந்த உண்மை. ஆண்டான் - அடிமை, ஏழை- பணக்காரர், சிறியவர் - பெரியவர் என்ற பாகுபாடின்றி அனைவரிடமும் எளிமையாகப் பழகுவார்கள்.

News image
Updated On :18 ஏப்ரல் 2013, 9:18 am

ஜி. அஹ்மது

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எளிமையே உருவானவர்கள் என்பது உலகறிந்த உண்மை. ஆண்டான் - அடிமை, ஏழை- பணக்காரர், சிறியவர் - பெரியவர் என்ற பாகுபாடின்றி அனைவரிடமும் எளிமையாகப் பழகுவார்கள். மேலும், ஸலாம் கூறுவதில், அவர் சிறுவராகவோ, பெரியவராகவோ இருந்தாலும் அண்ணலாரே முந்திக்கொள்வார்கள்.

குடும்பம், தொழில் துறை, அரசுத் துறை எதுவாக இருப்பினும் மக்களை அரவணைக்கக் கூடிய பண்பு கொண்ட எளிமை படைத்தோர்தான் சிறந்த நிர்வாகியாக இருக்க முடியும். இப்பண்பினால் எதிரியைக்கூட நண்பனாக உருவாக்க முடியும். வீரத்தாலும்,அதிகாரத்தாலும் வீழ்த்துவதைவிட எளிமையான வார்த்தைகளால் பேசி வெற்றி பெறலாம்.

பகைவனும் நேசனாவான் என்பதை அல்குர்ஆன் அத்தியாயம் 41, வசனம் 34-இல் அல்லாஹ் பக்குவமாக எடுத்துக் கூறுவதைக் காண்போம்:

"தொல்லைகளை அழகிய முறையில் தடுத்து நிறுத்துவீர்! அப்போது உமக்கும், அவனுக்கும் இடையே பகை உள்ளவன் கூட உற்ற நேசனைப் போன்று மாறிவிடுவான்''.

நபிகளார் அவர்கள் பெற்றுவிட்ட மாபெரும் வெற்றிக்கு அன்னாரின் எளிமையே காரணம் என்பதை திருக்குர்ஆன் விளக்குகிறது. முரட்டு சுபாவம் கொண்ட காட்டரபிகளையும் அண்ணலாரின் மனத்தைக் கவரும் மென்மையான உரையாடலைக் கொண்டே சரணடையச் செய்தார்கள்.

சூழ்நிலையினை தெளிவாக அறிந்து உணர்ச்சிவசப்பட வேண்டிய நிலையிலும், பொறுமையின் சிகரம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பேசும்போது வார்த்தைகளை அளந்தே உபயோகிப்பார்கள். எனவே நாமும் அண்ணலாரின் முன் மாதிரியை பின்பற்றி அகிலம் சிறக்க எளிமையாய் வாழ்ந்து காட்டுவோம்.

சொல், செயல், தோற்றம் மற்றும் அனைத்து நற்பண்பிலும் "எளிமை' என்கிற இயற்பண்பை மேற்கொள்ளும்படி இஸ்லாம் வலியுறுத்துவதை, இஸ்லாத்தின் இரண்டாவது கலீஃபா (ஜனாதிபதி) உமர் (ரலி) அவர்கள் தனது வாழ்வில் ஏற்று நடந்தார்.

ஜனாதிபதி உமர்(ரலி) பொறுப்பை ஏற்று மக்களிடம் உரையாற்றும்போது, "நான் ஆட்சியில் தவறு செய்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?'' எனக் கேட்டார்.

ஒரு முதியவர் எழுந்து, "நாங்கள் பேசமாட்டோம். இதோ இந்த வாள் பேசும்''என்றதும் ஜனாதிபதி பெருமகிழ்வுடன், தட்டிக் கேட்கும் தைரியம் படைத்த தனது குடிமக்களை தந்த இறைவனைப் புகழ்ந்து முதியவருக்கு நன்றி தெரிவித்தார்.

கலீஃபா உமர்(ரலி) அவர்களிடம் மறைந்திருந்த எளிமைப் பண்பானது, படிப்படியாக வளர்ச்சியடைந்து சிறப்புடன் விளங்க ஆரம்பித்தது.

ஜனாதிபதி உமர் (ரலி)யின் ஆட்சிக் காலத்தில் ஜெரூசலத்திலுள்ள "பைத்துல் முகத்தஸ்' புனித ஆலயத்தின் திறவு கோலை பெற்றுக்கொள்ள ஜனாதிபதிக்கு யூதத் தலைவர் அழைப்பு விடுத்திருந்தார்.

ஜனாதிபதி ஒட்டகத்தில் அமர, ஜனாதிபதியுடன் ஒட்டக ஓட்டி அயாஸ் ஓட்டகத்தைப் பிடித்து நடந்து வந்தார். சிறிது தூரம் சென்ற பின், ஒட்டக ஓட்டி மிகவும் களைப்பாகத் தென்பட்டார். இதனைக் கண்ட ஜனாதிபதி உடனே ஒட்டகத்திலிருந்து இறங்கி, ஒட்டக ஓட்டியை ஒட்டகத்தில் அமரும்படி கட்டளையிட்டார். ஒட்டக ஓட்டி மரியாதையின் காரணமாக மறுத்தார். ""தனது சகோதரனுக்கு தீங்க இழைத்ததற்காக, இறைவன் எனக்குத் தண்டனை தர நீ விரும்புகிறாயா?'' என ஜனாதிபதி கேட்டவுடன், வேறு வழியின்றி ஓட்டக ஓட்டி ஒட்டகத்தில் அமர, ஜனாதிபதி ஒட்டகத்தை ஓட்டிச் சென்றார்.

ஜனாதிபதி உமர்(ரலி)யை வரவேற்கச் சென்ற இஸ்லாமியப் போர் படைத் தளபதி அபூஉபைதா(ரலி)இக்காட்சியினைக் கண்டு அதிர்ச்சியுற்று, "யூதத் தலைவர் முன் இக்கோலத்தில் வர வேண்டாம். ஒட்டகத்தில் அமர்ந்து வாருங்கள்' என வேண்டினார்.

"கண்ணியம் என்பது இறைவனுக்கு சொந்தமாக இருக்கும்போது, இவர்களிடமா கண்ணியத்தை எதிர்பார்க்க வேண்டும் (அல்-குர்ஆன்:4:139)'' என்ற வசனத்தை ஓதிக் காட்டி ஒட்டகத்தில் ஏறி வர மறுத்துவிட்டார் ஜனாதிபதி. இவ்வாறு ஆட்சி புரிந்த கலீஃபா உமர்(ரலி) அவர்களின் ஆட்சிக்காலம் உலக வரலாற்றில் மகத்தான ஒன்றாக போற்றப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.