அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பகையை விரட்டும் அன்பளிப்பு!

ஒவ்வொரு மனிதனும் சொல்-செயல்களோடு நற்பண்புகளையும் பெற்றிருக்க வேண்டும். இஸ்லாம் கூறும் நற்பண்புகள் எண்ணிலடங்காதவை. அவற்றில் சிலவற்றைக் காண்போம்.

News image
Updated On :2 மே 2013, 10:51 am

ஜி. அஹ்மது

ஒவ்வொரு மனிதனும் சொல்-செயல்களோடு நற்பண்புகளையும் பெற்றிருக்க வேண்டும். இஸ்லாம் கூறும் நற்பண்புகள் எண்ணிலடங்காதவை. அவற்றில் சிலவற்றைக் காண்போம்.

பெற்றோரை மதித்தல், உறவைப் பேணுதல், பக்கத்து வீட்டாருடன் நல்லுறவை வளர்த்தல், விருந்தினரை உபசரித்தல், பிறரது குறையை பெரிதுபடுத்தி மனம் நோகும்படி செய்யாதிருத்தல், அனைவரிடமும் பணிவாக நடத்தல், அனாதைகளுக்கு அடைக்கலம் கொடுத்தல், ஒருவருக்கொருவர் அன்பளிப்பு வழங்கிக்கொள்ளுதல் போன்ற அனைத்துச் செயல்களும் நற்பண்புகளாகும்.

"இறைவன் உங்கள் தோற்றத்தையோ, உங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களது உள்ளத்தை (இறையச்சத்தை)ப் பார்க்கிறான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள். (நூல்: முஸ்லிம்).

தங்களது பொருள்களிலிருந்து ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளும் ஒரு தூய்மையான செயலுக்குப் பெயர்தான் "அன்பளிப்பு' என்பதாகும். அன்பளிப்பு, உள்ளத்திலுள்ள பொய், பொறாமை போன்ற அழுக்குகள் அனைத்தையும் நீக்கக்கூடிய ஒரு அரு மருந்தாகும்.

"பக்கத்து வீட்டுப் பெண்ணின் அன்பளிப்பை கேவலமாக எண்ண வேண்டாம். அது ஆட்டுக்காலின் ஒரு துண்டாக இருந்தாலும் சரியே. அதேபோல் அன்பளிப்பு கொடுக்கும் பெண்ணும், இந்த அன்பளிப்பை கேவலமாக எண்ண வேண்டாம்'' என்கிற இந்த அறிவு மொழியை நமது நெஞ்சங்களில் அன்பு விதைகளாகத் தூவி அறிவு மொழிகளாக நபி(ஸல்) அவர்கள் தருகிறார்கள். (நூல்: திர்மதீ).

அன்பளிப்புகளைப் பகிர்ந்துகொள்வதால் அக்கம் பக்கத்திலுள்ளவர்களிடம் இணைந்து வாழலாம் என்பதையும், நாம் அறிந்தோ- அறியாமலோ ஏற்பட்டுவிட்ட மனக்கசப்புகள் உள்ளத்தில் இருந்தாலும் இந்த அன்பளிப்பானது, அதனைக் கழுவி சுத்தம் செய்துவிடும் என்பதையும் இந்த நபிமொழி நமக்கு உணர்த்துகிறது.

பல ஆண்டுகளாக அக்கம் பக்கமுள்ள இரு குடும்பப் பெண்கள் பகையுணர்வோடு வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் பக்கத்து இல்லத் தம்பதிகள் ஹஜ் புனிதப் பயணம் செல்லும் தினத்தன்று, பகையுணர்வு கொண்டோராகிய பக்கத்து வீட்டார், அவர்களது வீட்டைப் பூட்டி வெளியூர் சென்றுவிட்டனர்.

மக்காவிற்கு புனிதப் பயணம் சென்ற தம்பதியர் நலமே திரும்பினர். பகையுணர்வு கொண்டவருக்கு, பேரீச்சம் பழம், "ஜம்ஜம்'(புனித) நீர், தஸ்பீஹ்மணி (இறைதியானம் புரியும் மணி), தொழுகை விரிப்பு ஆகியவற்றைக் கொடுத்தனுப்பினர்.

மேலே கூறப்பட்ட அன்பளிப்புப் பொருள்களை பகையுணர்வு கொண்டோர், "வேண்டாம்' என சொல்ல இயலாது பெற்றுக்கொண்டு, புனிதப் பயணம் சென்று வந்த ஹாஜிகளின் இல்லம் சென்று, தான் செய்த தவறுக்கு மன்னிப்பும் கேட்டனர். அன்று முதல் அக்கம் பக்கமுள்ள இரு குடும்பத்தாரும் உறவோடும் பாசத்தோடும் வாழலாயினர்.

ஒரு சிறிய அன்பளிப்பானது, பல்லாண்டு காலங்களாக இருந்த பகையுணர்வை விரட்டியடித்துவிட்டது. இரு மனங்களை இணைக்கும் பாலமாகிய அன்பளிப்புக்கு சக்தி அதிகம் உண்டு. பகைமையை விரட்டும் போர்வாள் அன்பளிப்பு. பாசத்தைப் பொங்க வைக்கும் பரிசு அன்பளிப்பு. இனியேனும் அக்கம் பக்கத்தாருக்கு அன்பளிப்பு கொடுத்து உறவோடும், மகிழ்வோடும் வாழ்வோமாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.