நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

வாழ்வில் ஒளி ஏற்றுபவனுக்கு ஆயிரம் தீப வழிபாடு

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கத்தில், அரங்கநாதர் கோயிலுடன் இணைந்து புகழ்பெற்று விளங்குகிறது ஸ்ரீலக்ஷ்மி நரஸிம்மர் திருக்கோயில்.

News image
Updated On :14 நவம்பர் 2013, 3:30 pm IST

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கத்தில், அரங்கநாதர் கோயிலுடன் இணைந்து புகழ்பெற்று விளங்குகிறது ஸ்ரீலக்ஷ்மி நரஸிம்மர் திருக்கோயில். காட்டழகிய சிங்கர் என்னும் திருநாமத்துடன்   இங்கே மிகப் பெரிய உருவில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார் ஸ்ரீலக்ஷ்மி நரஸிம்மர்.

ஸ்ரீரங்கம் கோயிலின் ஆயிரம் கால் மண்டபம் இருக்கும் கிழக்கு ராஜ கோபுரத்தின் வழியாக வெளியே வந்து, கீழ அடையவளஞ்சான் தெரு வழியாக கிழக்கே செல்லும் சிறு சாலையில் சுமார் ஒரு கி.மீ.   தொலைவு சென்றால் இந்தக் கோயிலை

அடையலாம்.

நூற்றாண்டுகளுக்கு முன்னர்... அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்த இடம். இங்கே யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து, விவசாயத்தைப் பாழ்படுத்தி, அடிக்கடி மக்களுக்கு பெரும் நெருக்கடியைத்   தந்தனவாம். அப்போது, யானைகளின் தொல்லையில் இருந்து தன் எல்லை மக்களைப் பாதுகாக்க, பெரியாழ்வாரின் சீடராகத் திகழ்ந்த நெடுமாறன் என்ற சீர்ப் பெயர் பெற்ற வல்லபதேவ பாண்டியன்,   லக்ஷ்மி நரஸிம்மப் பெருமாளை இங்கே எழுந்தருளச் செய்து, கோவிலும் கட்டுவித்தான். அப்படி உருப்பெற்ற இந்தக் கோவிலை கி.பி.1297ல், வீரபாண்டியனான ஜடாவர்மன் சுந்தரபாண்டியன்   புனரமைத்தான். இங்கே சந்நிதி கருவறையில், மஹாலக்ஷ்மியை மடியில் இருத்தி, ஆலிங்கனம் செய்த கோலத்தில் லக்ஷ்மி நரஸிம்ஹராக காட்டழகிய சிங்கப் பெருமானை தரிசிக்கலாம். சுமார் 8 அடி   உயரம். திருத்தமான அமைப்பு. வெள்ளியில் அமைந்த பற்கள் அமைப்பு நரஸிம்ஹப் பெருமானின் தத்ரூப தரிசனத்தை மனக்கண்முன் நிறுத்தும்.

சிறப்பு மிகுந்த இந்தக் கோயிலில் 12வது ஆண்டாக, நவ.17 ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு சஹஸ்ர தீப வழிபாடு நடைபெறுகிறது. மாருதி நண்பர்கள் குழுவினரின் ஏற்பாட்டில், ஞானநாயகன் என்ற   தலைப்பில் நாகை முகுந்தனின் உபந்யாசமும் நடைபெறுகிறது. இருள் கவிந்த இடமாகத் திகழ்ந்த இந்தக் கோயிலைச் சுற்றி ஒளிவெள்ளம் பரவும் காட்சி கண்கொள்ளாக் காட்சிதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.