• நீர்நிலையில் கல்லை எறிந்தால், நீரை மூடிக்கொண்டிருந்த பாசி கலைந்து நல்ல நீர் கண்ணுக்குப் புலப்படும். அதுபோன்று, நல்லவர்கள் சொல்லும் சொற்களின் உண்மைப் பொருளை ஆராய்ந்தறிந்தால் நம் அறிவு தெளிவடையும்.
- தாயுமானவர்
• "நான்எனது' என்ற எண்ணம் இருக்கும் வரையில் உன்னால் "உன்னை' அறிய முடியாது. இறைவன் சத்தியத்திற்கும் மேலான சத்தியம். (சத்தியத்திற்கே எடுத்துக்காட்டாக விளங்குபவன்) நீ அவனை உணர்கிற வரையில் அவனையே ஜபம் செய்து கொண்டிரு!
- குருநானக்
• கள்ளத்தனத்தை விட்டுவிட்டால், ஒருவன் பேரின்ப வெள்ளத்தில் திளைக்கலாம்.
- வடலூர் வள்ளலார்
• வேதாந்தத்தின் சாரம் உண்மை. உண்மையின் சாரம் அடக்கம். அடக்கத்தின் சாரம் மோட்சம். இதுதான் முடிவான தீர்மானம்.
- வியாசர்
• எந்தவிதமான லட்சியமும் இல்லாமல் வேலை செய்வது, எண்ணெய் இல்லாத விளக்குக்குச் சமமாகும்.
- யோகி வேமனா
• பழைமை பாராட்டலும், நேரான பார்வையும், சுற்றம் தழுவுதலும் இல்லறத்தானுக்கு இன்றியமையாதவை.
- ராமலிங்க அடிகள்
• நாம் கற்றறிந்துகொண்ட நூல்களின் அளவுக்குத்தான் நம்மிடம் நுட்பமான அறிவு பொருந்தியிருக்கும்.
- ஒளவையார்
• தீயவர்களும், ரம்பமும் ஒன்று. இரண்டும் முன்னும் அறுக்கும்; பின்னும் அறுக்கும். யாருக்கு உலகில் ஒன்றும் தேவையில்லையோ அவனே அரசனுக்கு அரசன்.
• மலர்களில் வாசம்போல, உன் இறைவன் உனக்குள்ளே இருக்கிறான். கஸ்தூரிமான் தன் நாபிலுள்ள கஸ்தூரி மணத்தைப் புல்லில் தேடுவதுபோல் நீ ஏன் இறைவன் வெளியே உழல்கிறாய்?
- கபீர்தாசர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராசிபுரத்தில் பெண்ணிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி நகைகள், பணம் கொள்ளை: மக்கள் அச்சம்
ஏர் இந்தியா விமான விபத்து: முதலாமாண்டு நினைவு நாளில் 2 நிமிட மௌன அஞ்சலி






