சித்ரகுப்தர் நகர்வலம்

காஞ்சிபுரம் நகரம் "சிவ காஞ்சி', "விஷ்ணு காஞ்சி' என்றழைப்படுவதற்குக் காரணம் சிவன் கோயில்களும், விஷ்ணு கோயில்களும் அங்கு நிறைந்திருப்பதுதான்.
சித்ரகுப்தர் நகர்வலம்
Updated on
1 min read

காஞ்சிபுரம் நகரம் "சிவ காஞ்சி', "விஷ்ணு காஞ்சி' என்றழைப்படுவதற்குக் காரணம் சிவன் கோயில்களும், விஷ்ணு கோயில்களும் அங்கு நிறைந்திருப்பதுதான். இவை தவிர ஓர் அரிதான கோயிலாக விளங்குவது சித்ரகுப்தன் கோயில்.

ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்ரகுப்தன் கோயில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அப்பொழுது சித்ரகுப்தருக்கும் கர்ணகி அம்பிகைக்கும் திருமணம் நடைபெறும். சித்திரா பௌர்ணமி அன்று தம்பதி சமேதராக சித்ர
குப்தர் நகர்வலம் வரும் காட்சி வெறெங்கும் காணமுடியாத அற்புதக் காட்சியாகும். வரும் பிலவ ஆண்டு சித்திரையில் இக் கண்கொள்ளாக் காட்சியைக் காணலாம். 

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் ராஜவீதியில் இக்கோயில் அமைந்துள்ளது. திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்து வழிபட்டுச் சிறப்பான பலனை அடைகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com