புத பகவானின் காரத்துவங்கள்

மிதுன ராசியும், கன்னி ராசியும் புத பகவானுக்குரிய ராசிகளாக அமைகின்றன. புத பகவான் மிதுன ராசியில் ஆட்சியும், கன்னி ராசியில் ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் பெறுகிறார்.
புத பகவானின் காரத்துவங்கள்
Published on
Updated on
1 min read

கன்னி ராசி நான்கு உபய ராசிகளில் இரண்டாவது உபய ராசியாக அமைகிறது. இது பெண் ராசியாகும். 

இதில் சந்திரன், சனி, குரு, ராகு, கேது பகவான்கள் ஆகியோர் நட்பு பெறுகின்றனர். சுக்கிர பகவான் நீச்சம், சூரிய பகவான் சமம். செவ்வாய் பகவான் பகை பெறுகிறார். 

சந்திர பகவானுடைய புதல்வர் புத பகவானாவார். கல்வி, வித்தை, ஞானம், மாதுலர் (மாமன்) ஆகியவைகளுக்கு காரகத்துவம் பெற்றவர். மஹா விஷ்ணுவின் அம்சமானவர். 

நெடிய உருவம், பச்சை நிறம், வாத நோயைக் கொடுப்பதும் புத பகவானேயாவார். ரத்தினங்களில் மரகதம் என்று சொல்லக்கூடிய பச்சைக்கல் இவருடைய ஆதிக்கத்திற்குட்பட்டதாகும். தானியங்களில் பச்சைப் பயறு, வாகனம் குதிரை ஆகும். 

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதிசயங்களாவன: 

நல்ல அழகுள்ள வாழ்க்கைத் துணை அமைவார். அனைவருடனும் கருணை காட்டி, அன்புடன் பழகுவார். புராண இதிகாச வேதங்களைக் கற்றுணர்ந்தவர். பலருக்கும் நண்பராகவும், பரோபகாரியாகவும் இருப்பார். கன்னி லக்னக்காரர்களுக்கு செவ்வாய் பகவானும் வலுத்திருந்தால் சிறந்த போர் வீரனாகவும் திகழ்வார். எதிரியுடன் கடைசி வரை போர் புரிவார். "நமது பாரத தேசமும் இந்த ராசியில் இடம் பெறுகிறது' என்று கூறுவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com