திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பலன் தரும் பரிகாரத் தலங்கள்

காரைக்குடியிலிருந்து 30 கி.மீ. தொலைவில் பட்டமங்கலம் உள்ளது. இங்குள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்தி கோயிலில் அன்னதானம் செய்து வழிபாடு செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம்.

Updated On :19 ஜூன் 2020, 1:45 pm

காரைக்குடியிலிருந்து 30 கி.மீ. தொலைவில் பட்டமங்கலம் உள்ளது. இங்குள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்தி கோயிலில் அன்னதானம் செய்து வழிபாடு செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம்.

மூலவரே உற்சவராக உள்ள கோயில்களில் ஒன்று கொப்புடை நாயகி அம்மன் கோயில். காரைக்குடி பேருந்து நிலையம் அருகே கல்லுகட்டி என்ற இடத்தில் இக்கோயில் உள்ளது. இங்கு கருப்பண்ணசாமி மற்றும் பைரவர் சந்நிதிகள் உள்ளன. இங்கு அன்னதானம் செய்து வழிபட்டால் வரவேண்டிய பணம் வந்து சேரும் என்பது நம்பிக்கை. 

லஷ்மி நரசிம்மர் கோயிலில் சக்கரத்தாழ்வார் தனி சந்நிதியில் எழுந்தருளி இருக்கிறார். இக்கோயில் காரைக்குடியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள அரியக்குடியில் அமைந்துள்ளது. 

லஷ்மி நரசிம்மருக்கு விசேஷ பூஜைகள் செய்து, ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் கடன் பிரச்னைகள் தீரும் என்று நம்பப்படுகிறது. 

பிள்ளையார்பட்டி பிள்ளையார் கோயிலில் இரண்டு கால்களையும் மடித்து வடக்கு நோக்கி அமர்ந்து பிள்ளையார் குபேரனை நோக்கி அமர்ந்திருக்கிறார். மேலும் அர்ஜுனவனேஸ்வரர், சிவகாமி தாயார், பைரவர் சந்நிதிகளும் உள்ளன. இங்கு அன்னதானம் செய்து வழிபட்டால் வேலை கிடைக்கும் என்பது ஐதீகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.