திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஆலயங்கள் ... அற்புதங்கள்...

குடியாத்தம்-நெல்லூர்பேட்டையில் அமைந்துள்ளது மாசுபடா அம்மன் கோயில். பிரிந்திருக்கும் கணவன் மனைவி ஒன்று சேர இந்த அம்மனை வழிபாடு செய்கின்றனர்.

News image
Updated On :26 ஜூன் 2020, 4:11 pm

குடியாத்தம்-நெல்லூர்பேட்டையில் அமைந்துள்ளது மாசுபடா அம்மன் கோயில். பிரிந்திருக்கும் கணவன் மனைவி ஒன்று சேர இந்த அம்மனை வழிபாடு செய்கின்றனர்.

குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் தேனியிலிருந்து கம்பம் போகும் வழியில் சின்னமனூரில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு சனீஸ்வர பகவானை வழிபடும் பக்தர்கள் காக்காய் பொம்மை வாங்கி வைத்து வழிபடுகின்றனர். சனிதோஷம் நீங்கும், நியாயமான வழக்குகளில் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.

நாகப்பட்டினத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் வடக்குப் பொய்கை நல்லூரில் கோரக்கர் சித்தர் சமாதி உள்ளது. இங்கு பெளர்ணமி தோறும் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. வேலை வாய்ப்பு மற்றும் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற வழிபடுகின்றனர்.

கடலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் பாலத்தின் கீழ் உள்ளது தரை காத்த காளியம்மன் கோயில். வெள்ளம் பெருக்கெடுத்து வரும்போது அதைத் தடுத்து மக்களைக் காத்ததால் இப்பெயர் ஏற்பட்டதாகக் கூறுகின்றனர். நியாயமான வழக்குகளில் வெற்றியடைய விசேஷ பூஜைகள் செய்து வழிபடுகின்றனர். 

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள சுகவனேஸ்வரர் கோயிலில் பைரவர் சந்நிதி உள்ளது. பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற இங்கு அஷ்டமி தினத்தில் அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.