மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

ஆலயங்கள் அற்புதங்கள்!

திருச்சி அருகிலுள்ள திருவெள்ளறை கோயிலில் சுவாமியைத் தரிசிக்க உத்திராயண, தட்சிணாயன என்று இரு வழிகள் உள்ளன. முதல் ஆறு மாதங்கள், உத்திராயண வழி திறக்கப்படும்.

News image
Updated On :15 மே 2020, 1:07 pm

திருச்சி அருகிலுள்ள திருவெள்ளறை கோயிலில் சுவாமியைத் தரிசிக்க உத்திராயண, தட்சிணாயன என்று இரு வழிகள் உள்ளன. முதல் ஆறு மாதங்கள், உத்திராயண வழி திறக்கப்படும். அடுத்த ஆறு மாதங்கள் தட்சிணாயன வழி திறக்கப்படும். புகழ்பெற்ற ஸ்வஸ்திக் குளம் இங்குள்ளது. இங்கு, ஒரு துறையில் குளிப்பவர்களை மற்றொரு துறையில் இருப்பவர்கள் பார்க்க முடியாது.

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், திருஈங்கோய் மலை உச்சியில் உள்ள மரகதேஸ்வரர் கோயிலில் உள்ள மரகதலிங்கத்தில் ஆண்டுதோறும் தை மாதம் "ரதசப்தமி' அன்று சூரிய ஒளி நேராகப் பட்டு அந்த மரகதப் பச்சை நன்கு ஒளி வீசும்.

திருவையாற்றுக்கு அருகில் உள்ள திங்களூரில் பங்குனி உத்திர நாளன்று சந்திரனின் ஒளி சிவலிங்கத்தின் மீது படும்படி கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.