சிம்மத்துக்கு பணவரவு, உங்க ராசிக்கு: வாரப் பலன்கள்!

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 
சிம்மத்துக்கு பணவரவு, உங்க ராசிக்கு: வாரப் பலன்கள்!

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

பெரியவர்களிடம் ஆசி பெறுவீர்கள்.  தொழிலில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.  உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளைத் திட்டமிட்டு செய்து நற்பெயரை எடுப்பார்கள். 

வியாபாரிகள் சிறிய அளவில் முதலீடு செய்து, வியாபாரத்தை விரிவுபடுத்துவார்கள். விவசாயிகள் விளைபொருள்களின் விற்பனையை நேர்மையாகச் செய்வார்கள்.

அரசியல்வாதிகள் பிறருக்கு உதவிகளைச் செய்வார்கள். கலைத்துறையினர் செயல்திறனை மேம்படுத்துவார்கள். 

பெண்கள் வீண்வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம்} 27.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

நிர்வாகத் திறன் வெளிப்படும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரிகளுக்கு வெளியூர் தொடர்புகளால் வருமானம் கிடைக்கும்.

விவசாயிகள் பாசன வசதிகளை மேம்படுத்துவார்கள்.  அரசியல்வாதிகளுக்கு சூழ்நிலை சாதகமாக இல்லாததால், எரிச்சலடையாமல் காரியமாற்றுவார்கள். 

கலைத்துறையினர் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவார்கள். பெண்கள் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேச மாட்டார்கள். மாணவர்கள் ஆழ்ந்து யோசித்து முடிவெடுப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

எடுத்த காரியத்தை விடாமுயற்சியுடன் பாடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கடன்களை அடைத்துவிடுவீர்கள். உடல் ஆரோக்கியமும், மன வளமும் மேம்படும். 

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை திருப்திப்படுத்துவார்கள். வியாபாரிகள் போட்டியாளர்களின் திட்டங்களை முன்கூட்டியே புரிந்துகொள்வார்கள்.

விவசாயிகள் பிறருக்கு உதவி செய்வார்கள். அரசியல்வாதிகள் நிதானமாகப் பேசவும். கலைத்துறையினருக்கு புதிய யுக்திகள் உதயமாகும். பெண்கள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவார்கள். 

மாணவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

நிதானத்துடனும், பொறுமையுடனும் செயல்படுவீர்கள்.  குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை முன் நடத்தும் வாய்ப்பைப் பெறுவீர்கள். 

வியாபாரிகள் முயற்சிகளால் உயர்வடைவார்கள். விவசாயிகள் புதிய நிலங்களை வாங்குவார்கள். அரசியல்வாதிகள் அவசியமற்ற எண்ணங்களை மனதில் இருந்து எடுத்து விடவும். 

கலைத்துறையினரின் நிலைமை சீர்பட்டு சாதகமாகவே அமையும். பெண்கள் புதிய  ஆடை, அணிகலன்களை வாங்குவார்கள். மாணவர்கள் விளையாட்டில் முழு முயற்சியுடன் ஈடுபடுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

பணவரவு நன்றாகவே இருக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள்.  ஆவணங்களைப் படித்துவிட்டு கையெழுத்திடவும்.

உத்தியோகஸ்தர்கள் தற்பெருமை பேசுவதைத் தவிர்க்கவும். வியாபாரிகள் தரமான பொருள்களை மட்டுமே விற்பனை செய்யவும். 

விவசாயிகளுக்கு லாபம் சிறப்பாக இருக்கும். அரசியல்வாதிகள் அனைத்துக் கட்சியினரையும் அனுசரித்து செல்லவும்.

கலைத்துறையினர் வசீகரப் பேச்சால் கவருவார்கள். பெண்கள் குடும்பத்தாருடன் சுமுகமாக இருப்பார்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் -  இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

சொந்த முயற்சிகளை நம்புவீர்கள். நேர்மையாகச் செயல்படுவீர்கள். தீயவர்களைவிட்டு விலகி விடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலக ரீதியான பயணங்களால் வெற்றி பெறுவார்கள். 

வியாபாரிகளுக்கு அரசு உதவிகள் கிடைக்கும். விவசாயிகள் பிறருடன் இணக்கமாகப் பழகுவார்கள். அரசியல்வாதிகள் தன்னம்பிக்கையுடன் கட்சிப் பணியாற்றுவார்கள்.  

கலைத்துறையினர் சக கலைஞர்களிடம் மரியாதையுடன் நடப்பார்கள். பெண்கள் கணவரின் முழு ஆதரவைப் பெறுவார்கள். மாணவர்கள் எதிர்பார்த்த மேல்படிப்புகளில் சேருவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணம் வந்து சேரும். துணிந்து செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் குறித்த காலத்துக்குள் பணிகளைச் செய்து முடிப்பார்கள்.  

வியாபாரிகள் கொடுக்கல் - வாங்கலில் சிறப்புகளைக் காண்பார்கள். விவசாயிகள் நன்மையடைவார்கள். அரசியல்வாதிகளுக்கு ஆதரவு பன்மடங்கு கூடும். கலைத்துறையினர் தங்களது திறமைகளை சுறுசுறுப்பான செயல்கள் மூலம் வெளிப்படுத்துவார்கள். 

பெண்கள் தன்னடக்கத்துடன் இருந்து குடும்பத்தினரைக் கவருவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

பொருளாதாரம் உயரும். ஆடம்பரப் பொருள்களை வாங்குவீர்கள். பிரிந்திருந்த உறவினர்கள் இணைவார்கள்.

உத்தியோகஸ்தர்களின் நேர்மையை மேலதிகாரிகள்  பாராட்டுவார்கள். வியாபாரிகளுக்கு வியாபாரத்திலிருந்த பிரச்னைகள் தீர்ந்துவிடும். 

விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் யாரையும் முழுமையாக நம்பக்கூடாது. கலைத்துறையினர் பொதுநிகழ்ச்சிகளில் முழுமையாகப் பங்கேற்பார்கள்.

பெண்கள் குடும்பத்தினரின் ஆலோசனைகளைக் கேட்டு சரியான முடிவை எடுப்பீர்கள். மாணவர்கள் தீயவர்களின் நட்பை விலக்கிக் கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

வருவாய் உயரத் தொடங்கும். செல்வாக்கு உயரும். பெரிய மனிதர்களைச் சந்திப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக ரீதியான பயணம் சாதகமாக அமையும். 

வியாபாரிகளுக்கு சிறிய முயற்சிகள் பெரிய வருவாயைக் கொண்டு சேர்க்கும். விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவார்கள். அரசியல்வாதிகள் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவார்கள்.  

கலைத்துறையினர் புதிய நுணுக்கங்களைக் கற்றுத் தெளிவார்கள். பெண்களுக்கு மருத்துவச் செலவுகள் குறையும். மாணவர்கள் பெற்றோரின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

தொழிலைச் சிறப்பாக நடத்துவீர்கள். புதிய தொழிலையும் ஆரம்பிப்பீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு நன்றாக இருக்கும். அரசு வழியில் சலுகைகள் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு உண்டு. வியாபாரிகள் போட்டியாளர்களைச் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். 

விவசாயிகள் பழைய குத்தகைப் பாக்கிகளை அடைப்பார்கள். அரசியல்வாதிகளோடு எதிரிகள் நேசக்கரம் நீட்டுவார்கள்.

கலைத்துறையினர் எதிர்பாராத வளர்ச்சியை அடைவார்கள். பெண்கள் எதிர்கால சேமிப்புகளில் கவனம் செலுத்துவார்கள். மாணவர்கள் அதிகாலையில் எழுந்து படிப்பார்கள்.

சந்திராஷ்டமம் - 21,22.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் சுகம் கூடும். தொழிலில் உழைப்பை அதிகரித்துக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பிறரை அனுசரித்து நடப்பார்கள். 

வியாபாரிகளுக்கு சக வியாபாரிகள் மத்தியில் அந்தஸ்து உயரும். விவசாயிகள் தரமான விதைகளை வாங்கி பயிரிடுவார்கள். 

அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆலோசனைகளைக் கேட்ட பிறகே முக்கிய முடிவுகளை எடுக்கவும்.

கலைத்துறையினர் சிறப்பாகப் பணியாற்றி நல்ல வருவாயைப் பெறுவார்கள். பெண்கள் ஆலயங்களுக்குச் செல்வார்கள். மாணவர்கள் யோகா கற்றுக் கொள்வார்கள்.

சந்திராஷ்டமம் - 23,24.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மனதில் நம்பிக்கை வளரும். இக்கட்டான நிலையில் சமயோஜித புத்தி கைகொடுக்கும். எவரிடமும் வெளிப்படையாகப் பேச வேண்டாம்.

உத்தியோகஸ்தர்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வார்கள். வியாபாரிகள் கூட்டாளிகளை குறை சொல்லாமல் நடப்பார்கள். 

விவசாயிகள் கடுமையாக உழைத்து நல்ல மகசூலைக் காண்பார்கள். அரசியல்வாதிகள் தங்கள் செயல்களைச் சீராகச் செய்து முடிப்பார்கள்.

கலைத்துறையினருக்கு சிறப்பான அங்கீகாரம் கிடைக்கும். பெண்கள் புதிய சேமிப்புகளில் ஈடுபடுவார்கள். மாணவர்கள் சுறுசுறுப்புடன் இருக்கவும்.

சந்திராஷ்டமம் - 25,26.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com