இந்த வாரம் யாருக்கு பணவரவு: வாரப் பலன்கள்

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (டிச.22 - 28) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
இந்த வாரம் யாருக்கு பணவரவு: வாரப் பலன்கள்
Updated on
3 min read

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (டிச.22 - 28) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

தொழிலுக்குத் தேவையான உதவிகளைப் பெற பயணம் செய்வீர்கள். புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். எதிர்ப்புகளால் சிறிது சஞ்சலப்படுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பேச்சைக் கேட்பீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளுடன் இணக்கமாக இருப்பீர்கள். 

விவசாயிகள் செலவு செய்ய நேரிடும். அரசியல்வாதிகள் மக்களின் தேவைகளில் கவனம் செலுத்துவீர்கள்.

கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வரும்.  மாணவர்கள் உற்சாகமாய் இருப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

பணவரவுக்கு வழி செய்வீர்கள். எடுத்த வேலைகளை முடிப்பீர்கள். மனதில் தெளிவுடன் காணப்படுவீர்கள். நம்பகத் தன்மையை உயர்த்திக் கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். 

வியாபாரிகளுக்கு விற்பனை சிறப்பாக இருக்கும்.  விவசாயிகள் நீர்ப் பாசன வசதிகளைப் பெற முயற்சிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு பிறர் ஆதரவாய் இருப்பார்கள்.

கலைத்துறையினருக்கு முன்னேற்றம் உண்டு. பெண்கள் புதிய வீடு வாங்க முயற்சிப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

நீண்ட நாள் பிரச்னைகளுக்குத் தீர்வு உண்டு. புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு. மருத்துவச் செலவுகள் குறையும். பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களின் வேலைப்பளு குறையும். வியாபாரிகள் கடுமையாக உழைப்பீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை நாடிச் செல்வீர்கள். அரசியல்வாதிகள் உணர்ச்சிவசப்படாமல் கருத்துகளை எடுத்துரைப்பீர்கள்.

கலைத் துறையினர் புதிய வாய்ப்புகளை உருவாக்குவீர்கள்.  பெண்கள் குடும்பத்தில் அமைதியைக் காண்பீர்கள். மாணவர்கள் பெற்றோர் பேச்சை கேட்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

வங்கிக் கடன் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். பூர்விகச் சொத்துகளில் வருமானம் குறையும்.  நண்பர்களின் நடவடிக்கைகளில் வாழ்க்கைப் பாடம் கற்பீர்கள்.  

உத்தியோகஸ்தர்கள் பணியிட மாற்றங்களை ஏற்பீர்கள். வியாபாரிகள் வெளியூரில் இருந்து உதவிகளைப் பெறுவீர்கள். விவசாயிகள் கால்நடைகளுக்குச் செலவழிப்பீர்கள். அரசியல்வாதிகள் அவசியமில்லாத விஷயங்களில் தலையிட மாட்டீர்கள்.

கலைத் துறையினருக்கு பிறரின் ஆதரவு கிடைக்கும். பெண்கள் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். மாணவர்கள் விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

தொழிலைத் திறம்பட நடத்துவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி பெறு
வீர்கள். குடும்பப் பிரச்னைகள் நீங்கி நிம்மதி அடைவீர்கள்.  போட்டி
களைச் சமாளிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். வியாபாரிகள் வருமானத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் தரமான விதைகளை விதைப்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கலைத் துறையினர் ரசிகர்களுடன் இணக்கமாக இருப்பீர்கள். பெண்கள் பிறருக்கு உதவுவீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

தொழிலில் அணுகுமுறைகளை மாற்றுவீர்கள். இழுபறிகள் நீங்கும். எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். பெற்றோரின் ஆரோக்கியம் சீராகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மரியாதை அதிகரிக்கும். வியாபாரிகள் கடையை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகள் புதிய குத்தகை முயற்சிகளைச் செயல்படுத்துவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு ஆதரவு பெருகும். கலைத் துறையினருக்கு போட்டிகள் அதிகரிக்கும். பெண்களுக்கு ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். மாணவர்கள் தனித்திறமையை வெளிக்கொணர்வார்கள்.

சந்திராஷ்டமம் - டிச. 22, 23.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

கடமை உணர்ச்சி மிகும். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். எதிராகச் செயல்பட்டவர்கள் தானாகவே விலகி விடுவார்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பண வரவு உண்டு. வியாபாரிகள் புதிய கூட்டாளிகளைச் சேர்த்துகொள்வீர்கள். விவசாயிகளுக்கு புழு பூச்சி தொல்லை இருக்காது. அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள்.

கலைத் துறையினர் புதிய முயற்சிகளைச் செயல்படுத்துவீர்கள். பெண்கள் குடும்பப் பொறுப்புகளில் ஈடுபடுவீர்கள். மாணவர்களிடம் ஆசிரியர்கள் நல்ல முறையில் நடப்பார்கள்.

சந்திராஷ்டமம் - டிச. 24, 25.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

ஆளுமைத் திறனும், அந்தஸ்தும் அதிகரிக்கும்.  வீண் சந்தேகங்கள் தீரும். சிலர் திடீர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோகஸ்தர்கள் பிறரை அனுசரித்து நடப்பீர்கள்.

வியாபாரிகள் சில பொருள்களின் விலையை குறைத்து விற்பீர்கள். விவசாயிகளுக்கு சிறு பிரச்னைகள் ஏற்படும். அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் பார்வையிலிருந்து ஒதுங்கி செயல்படுவீர்கள்.

கலைத் துறையினரின் முயற்சிகள் தாமதமாக நிறைவேறும். பெண்களுக்கு உடன்பிறந்தோர் உறுதுணையாக இருப்பார்கள். மாணவர்கள் பிறருக்கு உதவிகளைச் செய்வீர்கள்.

சந்திராஷ்டமம் - டிச. 26, 27, 28.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

சுப நிகழ்ச்சிகளை நடத்த முயற்சிப்பீர்கள். பொருளாதாரம் ஏற்றமாகவே தொடரும். புதிய சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள். ஓய்வின்றி உழைப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் குறை கூறுவோரை பொருட்படுத்த வேண்டாம். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

விவசாயிகள் நல்ல விளைச்சலைக் காண்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்கள் உறுதுணையாக இருப்பார்கள். கலைத் துறையினர் புதிய படைப்புகளை உருவாக்குவீர்கள்.

பெண்கள் கணவரின் பாசத்தில் நனைவீர்கள். மாணவர்கள் உடற்பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

உங்கள் செயல்களுக்கு புதிய அங்கீகாரம் கிடைக்கும்.  சிந்தித்து முடிவெடுப்பீர்கள். புதிய நண்பர்களால் ஆதாயம் அடைவீர்கள்.  

உங்களுக்குக் கீழ்பணிபுரிவோர் மனமறிந்து நடப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் முன்னுரிமையைப் பெறுவீர்கள்.

வியாபாரிகள் பிறர் ஆலோசனையைக் கேட்டு நடப்பீர்கள். விவசாயிகள் புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவார்கள்.

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் தேடி வரும். கலைத் துறையினர் நற்பெயர் எடுப்பீர்கள். பெண்களுக்கு மருத்துவச் செலவுகள் குறையும். மாணவர்களுக்கு வெற்றிகள் உண்டு.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

வருமானம் படிப்படியாக உயரும். தொழிலில் சவால்களைத் திறம்பட கையாளுவீர்கள். அரசு கெடுபிடிகள் குறையும். உடல் உபாதைகள் தீரும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் புகழ் பெறுவீர்கள்.

வியாபாரிகள் எதிரிகளை இனம் காண்பீர்கள். விவசாயிகளுக்கு பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் மக்கள் நலப் பணிகளில் ஈடுபடுவீர்கள்.

கலைத் துறையினர் எடுத்த காரியங்களை முடிப்பீர்கள். பெண்கள் பிரிந்த உறவினர்களை இணைக்க முயற்சிப்பீர்கள். மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பண வருவாய் இருமடங்காகும். அரசு சலுகைகளைப் பெறுவீர்கள். புதிய தொழில் வாய்ப்புகள் உண்டு. பூர்விகச் சொத்துகளால் பாகப் பிரிவினை உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். வியாபாரிகள் கொடுக்கல்}வாங்கலில் உயர்வைக் காண்பீர்கள். விவசாயிகளுக்கு நல்ல யோகம் உண்டு. அரசியல்வாதிகள் வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். கலைத் துறையினர் புதிய திருப்பங்களைக் காண்பீர்கள். 

பெண்கள் கணவர் வழி உறவினர்களால் நன்மை அடைவீர்கள். மாணவர்கள் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com