எந்த கோயிலில் என்ன விஷேசம்? பிரம்மோற்சவம் முதல் தேரோட்டம் வரை..!
இந்த வார நிகழ்வுகள் பற்றி..

மகாவிஷ்ணு குணசீல மஹரிஷியின் தவத்துக்காக ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேசனாகக் காட்சியளித்த அற்புதத் தலம், திருச்சி மாவட்டத்தில் உள்ள குணசீலம். இங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் சங்கு சக்கரதாரியாய் திருமார்பில் இலக்குமி துலங்க, கையில் செங்கோல் ஏந்தி நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.
தன்னை நாடி வந்து வணங்கும் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை எல்லாம் நல்கி அருளாட்சி புரிந்துவரும் எம்பெருமானை, முக்கியமாக மனநலம் பாதிக்கப்பட்டோர் 48 நாள்கள் விரத முறைப்படி வணங்கினால், அவ்வினைகள் யாவையும் பரம கருணையினாலே போக்கி அருள்புரிகின்றார்.
இந்தக் கோயிலில் பிரம்மோற்சவம் செப்டம்பர் 13-ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 24-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் செப்டம்பர் 20-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கும், திருத்தேர் வடம் பிடித்தல் செப்டம்பர் 22-ஆம் தேதி காலை 8.30 மணிக்கும் நடைபெற இருக்கிறது.
அகண்ட நாம ஸங்கீர்த்தனம்
ஸ்ரீ பால ராமாநுஜ பால பக்த ஜன அறக்கட்டளை சார்பில், 6-ஆம் ஆண்டு அகண்ட நாம ஸங்கீர்த்தனம், அரக்கோணம், ஜோதி நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அமைந்துள்ள செல்வ விநாயகர் ஆலயத்தில், செப். 19 காலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரை நடைபெற இருக்கிறது.
திருத்தேர்
கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலையில் அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் செப்டம்பர் 12-ஆம் தேதி தொடங்கிய புரட்டாசிப் பெருந்திருவிழா அக்டோபர் 6-ஆம் தேதி வரை பல்வேறு உற்சவங்களுடன் நடைபெற இருக்கிறது. அதில் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வடம்பிடித்தல் செப்டம்பர் 23-ஆம் தேதி காலை 9.05 மணிக்கு மேல் 9.45 மணிக்குள் நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






