
கடலூர் மாவட்டம், ம. ஆதனூரில் அமைந்துள்ள திருநாளைப்போவார் (நந்தனார்) திருக்கோயிலில், "நந்தனார் குருபூஜை' அக்டோபர் 1-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 7 மணிமுதல் சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்த விழாவில் ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, நடிகை கெüதமி, சமூகச் செயல்பாட்டாளர் கர்னல் தியாகராஜன் பங்கேற்கிறார்கள். சிவ.தாமோதரன் அய்யா திருவாசக விண்ணப்பம் ஏறெடுக்கிறார்.
63 நாயன்மார்களில் ஒருவரான திருநாளைப்போவாருக்கு, இதே நாளில் அவர் பயணம் மேற்கொண்ட சிதம்பரம், திருப்புங்கூர், நந்தன்மேடு (பந்தநல்லூர்), நத்தமேடு, திருமருகல், திருமாகாளம் (திருவாரூர்), சேரன்மகாதேவி, கன்னியாகுமரி (ஆயிரமீஸ்வரர்), திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்), திருஉத்திரகோசமங்கை, கரூர், ஆதனூர் (உளுந்தூர்பேட்டை) ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள சிவாலயங்களிலும், திருத்தலங்களிலும் குருபூஜை நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






