ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மனித உரிமை அமைப்புகள் குறை கூறியுள்ளன.
இலங்கை தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் குறித்து லண்டனில் உள்ள ஆம்னெஸ்டி அமைப்பின் பிரதிநிதி யோலந்தா பாஸ்டர் கூறியது:
இலங்கை ராணும் மற்றும் விடுதலைப்புலிகள் தரப்பில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச நீதி விசாரணை நடத்த வேண்டும் என தீர்மானம் வலியுறுத்தாதது கவலை அளிக்கிறது என்றார்.
இலங்கையில் ஏற்கெனவே நடைபெற்ற, தற்போது நடைபெறும் மனித உரிமை மீறல்களை இத்தீர்மானம் வெளிக்கொணர்ந்துள்ளது. எனினும் போர்க்குற்றம் குறித்து சுதந்திரமான சர்வதேச நீதி விசாரணைக்கு வழிகாணாதது வருத்தம் அளிக்கிறது.
அதே வேளையில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதின் மூலம் ஐ.நா. உறுப்பு நாடுகள் இலங்கையின் கடந்த கால தவறுகள் விஷயத்தில் மென்மையாக இருக்க மாட்டோம் என்பதை தெளிவாக சுட்டிக் காட்டி உள்ளன.
நியுயார்க்கைச் சேர்ந்த மனித உரிமைகள் கண்காணிப்பகம் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில்:
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றிய உண்மைகளை அம்பலப்படுத்த சர்வதேச நீதி விசாரணை தான் ஒரே வழி எனத் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தி வங்கதேசம் வெற்றி!

சிஜேபி நடத்தும் போராட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்பு - புகைப்படங்கள்

முதல்வர் விஜய் மீது ரஜினிக்கு பொறாமையா? லதா ரஜினிகாந்த் விளக்கம்!

பெய்ரூட்டில் அருகே இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


