கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

அமெரிக்காவில் சூறாவளி: 91 பேர் சாவு

அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரில் திங்கள்கிழமை வீசிய பெரும் சூறாவளியில் சிக்கி 20 குழந்தைகள் உள்பட 91 பேர்

News image
Updated On :22 மே 2013, 2:48 am IST

அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரில் திங்கள்கிழமை வீசிய பெரும் சூறாவளியில் சிக்கி 20 குழந்தைகள் உள்பட 91 பேர் உயிரிழந்தனர். 233 பேர் காயமடைந்தனர்.

ஓக்லஹோமா நகரின் மூர் பகுதியில் மணிக்கு 320 கி.மீ வேகத்தில் வீசிய சூறாவளியால் அந்நகரமே சின்னாபின்னாமாகி விட்டது. ஏராளமான வீடுகள், பள்ளிகள் முற்றிலும் சேதமடைந்தன.

இச்சூறாவளியால் 20 குழந்தைகள் உள்பட 90 பேர் உயிரிழந்தனர். 70 குழந்தைகள் உள்பட காயமடைந்த 233 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஓக்லஹோமா நகரில் அவசர நிலையை பிறப்பித்து அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அங்கு மீட்புப் படைகளை அனுப்பி வைத்துள்ளார். நிலப்பகுதியில் 40 நிமிடங்கள் தங்கி வீசிய சூறாவளியால் 2 ஆரம்பப் பள்ளிகளில் இருந்த குழந்தைகள் உயிருடன் தூக்கி எறியப்பட்டனர்.

மீட்புப் படையினர் அப்பகுதியில் வீடு வீடாகச் சென்று இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடி வருகின்றனர்.  சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தங்கள் குழந்தைகளின் கதி என்ன ஆனது என தேடி வரும் பெற்றோரைப் பார்த்தால் இதயம் நொறுங்கி விட்டது என ஓக்லஹோமா ஆளுநர் மேரி பாலின்ஸ் தெரிவித்துள்ளார்.கடந்த 36 மணி நேரத்தில் சூறாவளியால் ஏராளமான வீடுகள், கட்டடங்கள் வெறும் கற்குவியலாக மாறி விட்டன.

கடந்த 1999-ம் ஆண்டுக்கு ஏற்பட்ட சூறாவளியால் 36 பேர் இதே பகுதியில் உயிரிழந்தனர். அதன்பின்னர் தற்போது வீசிய பெரும் சூறாவளி இது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.