ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

அமெரிக்காவில் 18 வயதில் பொறியியல் பட்டம் பெற்ற இந்திய மாணவருக்கு பாராட்டு

இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் மிகக் குறைந்த வயதில் பொறியியில் பட்டப்படிப்பை முடித்த மாணவர் ரீதாங்கர்தாûஸ இந்தியத் தூதரகம் கௌரவித்துள்ளது.

Updated On :12 ஜூன் 2013, 1:21 am IST

இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் மிகக் குறைந்த வயதில் பொறியியில் பட்டப்படிப்பை முடித்த மாணவர் ரீதாங்கர்தாûஸ இந்தியத் தூதரகம் கௌரவித்துள்ளது.

கொல்கத்தாவில் பிறந்த ரீதாங்கர் தாஸ்(18), அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மிகக் குறைந்த வயதில் பயோ என்ஜினியரிங்கில் பட்டப் படிப்பை முடித்துள்ளார். இந்தப் படிப்பை அவர் மூன்றே ஆண்டுகளில் முடித்து, பட்டம் பெற்றுள்ளார். இதற்காக அவரை வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் கௌரவித்தது.

இந்தியத் தூதர் நிருபமா ராவ் அவரைப் பாராட்டிப் பேசுகையில், ""ரீதாங்கர் தாஸ் 18 வயதில் பெரிய சாதனை படைத்துள்ளார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கடந்த நூறாண்டுகளில் இவ்வளவு இளம் வயதில் பொறியியில் பாடத்தில் பட்டம் பெற்ற முதல் நபர் என்ற சாதனையைப் படைத்த அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்'' என்று தெரிவித்தார்.

ரீதாங்கர் தாஸ் தனது ஏற்புரையில், ""ஒவ்வொருவருக்கும் வாழ்வதற்கான உரிமை உள்ளது என்று காந்திஜி நம்பிக்கை கொண்டிருந்தார். மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர் கிங் போன்றவர்களின் முயற்சிகள் இல்லாமல் போயிருந்தால், நான் இப்போது இங்கு

இருந்திருக்க முடியாது'' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

மிகக் குறைந்த வயதில் பட்டப்படிப்பை முடித்ததற்காக அவருக்கு ரூ.1 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரீதாங்கர் தாஸ் அடுத்ததாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பயோமெடிக்கல் என்ஜினியரிங் பாடத்தில் முதுநிலைப் பட்டப்படிப்பில் சேர முடிவு செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.