பாகிஸ்தான் மற்றும் அரபு நாடுகளுக்கு இஸ்ரேல் கடந்த 5 ஆண்டுகளாக ராணுவ சாதனங்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
பிரிட்டனின் வர்த்தகத் துறை வெளியிட்ட செய்தி அறிக்கையில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரிட்டனின் வர்த்தகம், புதிய தொழில்நுட்பம், திறன் துறையானது ஆயுதங்கள், பாதுகாப்பு சாதன ஏற்றுமதிக்கான பிரிட்டனின் அனுமதி குறித்து ஆராயும் அமைப்பாகும்.
பாகிஸ்தானைத் தவிர, எகிப்து, அல்ஜீரியா, ஐக்கிய அரபு அமீரகம், மொராக்கோ ஆகிய நாடுகளுக்கும் இஸ்ரேல் ராணுவ சாதனங்களை ஏற்றுமதி செய்துள்ளது.
2011ல், ரேடார் சாதனங்கள், மின்னணு போர் உத்தி சாதனங்கள், போர் விமானங்களுக்கான உதிரி பாகங்கள், ராணுவ மின்னணு சாதனங்கள், பயிற்சி விமான உதிரி பாகங்களை பிரிட்டனிடம் இருந்து வாங்கி பாகிஸ்தானுக்கு அனுப்ப அனுமதி கேட்டது இஸ்ரேல் என்றும் பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.
இதே போல 2010லும் பாகிஸ்தானுக்கு ராணுவ சாதனங்கள் ஏற்றுமதி செய்ய பிரிட்டனிடம் இஸ்ரேல் அனுமதி கேட்டது.
இந்த சாதனங்கள் என்ன பயன்பாட்டுக்கு என பத்திரிகை செய்தியில் தெரியவில்லை என்றாலும் சீன, பாகிஸ்தான் கூட்டு முயற்சியில் தயாராகும் ஜேஎப்17 ரக போர் விமானங்களுக்கு என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜனவரி 2008 முதல் டிசம்பர் 2012 வரையில் பிரிட்டனிடம் ராணுவ சாதனங்களை கேட்டு இஸ்ரேலிடமிருந்து ஏராளமான கோரிக்கை மனுக்கள் வந்துள்ளன. இவை இஸ்ரேலின் சொந்த பயன்பாட்டுக்கோ அல்லது 3ம் தரப்பு நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்காகவோ என தெரியவருகிறது.
எந்தெந்த நாடுகளுக்கெல்லாம் இஸ்ரேல் ராணுவ சாதனங்களை ஏற்றுமதி செய்துள்ளது என்ற பட்டியலை பிரிட்டன் பத்திரிகை செய்திகள் வெளியிட்டுள்ளன.
தூதரக ரீதியில் தனக்கு உறவு இல்லாத ஐக்கிய அரபு அமீரகம், மொராக்கோ, அல்ஜீரியா உள்ளிட்ட நாடுகளுக்கும் இஸ்ரேல் ராணுவ சாதனங்களை ஏற்றுமதி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
2010ல் எகிப்து, மொராக்கோ ஆகிய நாடுகளுக்கு, பிரிட்டன் உதிரி பாகங்கள் பொருத்தப்பட்ட இஸ்ரேல் மின்னணு ராணுவ சாதனங்களை ஏற்றுமதி செய்ய இஸ்ரேல் அனுமதி கோரியது.
இந்தியா, சிங்கப்பூர், துருக்கி, வியத்னாம், தென்கொரியா, ஜப்பான் ஆகியவை இஸ்ரேலின் பிற வாடிக்கையாளர்கள்.
விமான என்ஜின்கள், செயற்கைக்கோள் ரேடார்கள் உள்ளிட்ட ராணுவ சாதனங்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி கேட்டு இஸ்ரேல் அணுகியபோது பிரிட்டன் நிராகரித்தது என்றும் பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

