அமெரிக்க கண்டத்தில் வேகமாக பரவி பரவும் ஸிகா வைரஸ் காரணமாக உலக சுகாதார நிறுவனம் (WHO) சர்வதேச அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது.
இந்த வைரஸ் முதன்முதலில் 1947-ஆம் ஆண்டு உகாண்டாவில் உள்ள ஸிகா (Zika) என்ற காட்டில் கண்டறியப்பட்டது. அதனால், இதற்கு ஸிகா வைரஸ் என்று பெயரிடப்பட்டது. டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்களைப் பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்களால்தான் இந்த வைரஸும் பரவுகிறது.
இந்த வைரஸ் பாதித்த கர்ப்பினிகளுக்கு பிறக்கும் குழந்தைகளின் தலை சிறியதாக உள்ளது.
ஸிகா வைரஸ் குறித்த உலக சுகாதார மையத்தின் அவசரக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்பு ஸிகா வைரஸ் காரணமாக சர்வதேச சுகாதார அவசர நிலையை பிரகடனம் செய்தது.
கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் இதுவரை காய்ச்சல், எபோலா மற்றும் போலியோ காரணமாக 3 மூன்று முறை சர்வதேச அவசர நிலையை சுகாதார மையம் பிரகடனம் செய்திருந்தது. தற்போது ஸிகா வைரஸ் காரணமாக 4-வது முறையாக அவசநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார மைய பொது இயக்குநர் மார்க்ரேட் ஷான், ஸிகா வைரஸை கண்டறிவதிலும் அதை அழிப்பதிலும் சர்வதேச ஒத்துழைப்பு தேவை என்றார்.
அதே நேரத்தில் ஸிகா வைரஸ் காரணமாக பயணங்கள் மற்றும் வியாபாரங்களை தடை செய்ய தேவையில்லை என்றார்.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஓலிம்பிக் போட்டிகள் நடைபெறவிருக்கும் நிலையில் ஸிகா வைரஸ் காரணமாக, கர்ப்பினிகள் இங்கு வரவேண்டாம் என பிரேசில் அரசாங்கம் அறிவித்துள்ளது.
கர்ப்பினிகளை ஸிகா வைரஸ் வேகமாக தாக்குவதால் அவர்கள் இங்கு வரவேண்டாம் என பிரேசில் அமைச்சர் ஜாக்குஸ் வாக்னர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

3வது நாளாக சரிந்த இந்திய பங்குச் சந்தை! சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு!

2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு! பாக். செல்கிறார் ஈரானின் வெளியுறவு அமைச்சர்!

இந்த ஆண்டின் மிக வெப்பமான நாள்! தில்லியில் 109.4 டிகிரி வெய்யில்!

ஜெயிலர் - 2 மெகா ஹிட் அடிக்கும்: யோகி பாபு
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


