

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை விடுதலை செய்வதோடு அவருக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்வீடன் அரசுகள் இழப்பீடு வழங்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் குழு அறிக்கை அளித்துள்ளது.
ஆஸ்திரேலியாவை பூர்விமாகக் கொண்டவர் ஜூலியன் அசாஞ்சே. கடந்த 2006 ஆம் ஆண்டு தான் தொடங்கிய விக்கிலீக்ஸ் என்ற இணையதளம் மூலம் அமெரிக்க ராணுவத்தின் 5 லட்சம் ரகசிய கோப்புகள், 2.5 லட்சம் தூதரக ரகசிய கோப்புகளை வெளியிட்டார். இது தொடர்பாக அமெரிக்கா இவர் மீது நடவடிக்கை எடுக்க முயன்று வருகிறது.
இந்நிலையில், அவர் லண்டனிலுள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு அடைக்கலம் புகுந்தார்.
இதனிடையே, ஸ்வீடனில் 2 பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக அவர் மீது அந்நாட்டில் வழக்கு தொடரப்பட்டது.
தூதரகத்தைவிட்டு அசாஞ்சே வெளியேறினால், அவர் கைது செய்யப்பட்டு பாலியல் வழக்கை சந்திக்க ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்படுவது நிச்சயம் என்ற நிலையில் அவர் ஈக்வடார் தூதரகத்திலேயே தொடர்ந்து வசித்து வருகிறார்.
இந்த நிலையில், பிரிட்டன் போலீஸார் மீது அவர் ஐக்கிய நாடுகள் சபையில் 2014-இல் புகார் தெரிவித்தார்.
தூதரகத்தைவிட்டு வெளியேறினால் பிரிட்டன் போலீஸார் தன்னைக் கைது செய்யும் அபாயம் உள்ளது. சரியான காரணமின்றி தான் "சிறைக் காவல்' நிலையில் உள்ளதாகத் தனது புகாரில் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து, சட்டத்துக்குப் புறம்பான சிறைக் காவல் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளும் ஐ.நா. குழு விசாரணை நடத்தியது.
அசாஞ்சே சுதந்திரமாக எங்கும் செல்வதற்கு உரிமை உள்ளது என்று தீர்ப்பளித்த ஐ.நா. விசாரணை ஆணையம், இங்கிலாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.