அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

'திருடர்', 'சர்வாதிகாரி' - அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிகரிக்கும் வார்த்தை மோதல்கள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் இடையே வார்த்தை மோதல்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

News image
Updated On :4 ஜூன் 2016, 7:52 am

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் இடையே வார்த்தை மோதல்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும், முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியுமான ஹிலாரியை 'திருடர்' என்று வர்ணித்துள்ளார் டிரம்ப். அதே நேரத்தில் டிரம்பை ஒரு 'சர்வாதிகாரி'  என்று விமரிசனம் செய்துள்ளார் ஹிலாரி கிளிண்டன்.

58-வது அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது. இரு கட்சி ஆட்சிமுறை உள்ள அமெரிக்காவில் பிரதான கட்சிகளான ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான உட்கட்சி தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது.

இதனிடையே கலிஃபோர்னியா மாகாணத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசிய டிரம்ப், ஹிலாரி கிளிண்டன் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளைக் கூறினார். அவரை 'திருடர்' என்று கூறிய டிரம்ப், இ-மெயில் குற்றச்சாட்டுகளுக்காக ஹிலாரி சிறையில் தள்ளப்பட வேண்டும் என்றார்.

ஹிலாரி கிளிண்டன் இ-மெயில் மூலம் நாட்டின் பாதுகாப்பு ரகசியங்களை வெளியிட்டிருந்தார் என டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும், ஹிலாரி கிளிண்டன் தனக்கு சமமான போட்டியாளர் இல்லை என்று கூறிய டிரம்ப், ஜனநாயக கட்சியின் ஆதிக்கம் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில் வெற்றி பெறுவேன் என்றார்.

இதனிடையே டிரம்ப் ஒரு சர்வாதிகாரி போல் செயல்பட்டு வருவதாக ஹிலாரி கிளிண்டன் குற்றம்சாட்டினார். அமெரிக்காவில் குடியேறுபவர்கள் குறித்து மட்டுமே டிரம்ப் தேர்தல் பிரசாரத்தில் பேசி வருகிறார். இது ஒரு அரசியல் 'ஸ்டண்ட்' ஆகும்.

அனைவரின் கவனத்தை பெறும் வகையிலும், தொலைக்காட்சிகளில் தனது முகம் வர வேண்டும் என்ற நோக்கிலேயும் டிரம்ப் இவ்வாறு பேசி வருவதாக ஹிலாரி கிளிண்டன் குற்றம்சாட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.