ஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

இவாங்கா போல முகத்தோற்றம் பெற அமெரிக்க பெண்களிடையே போட்டாபோட்டி!

அமெரிக்க அதிபர் டிரம்ப் மகள் இவாங்கா போல முகத்தோற்றத்தைப் பெற அமெரிக்கப் பெண்களிடையே போட்டாபோட்டி ஏற்பட்டுள்ளது. 

News image
Updated On :24 செப்டம்பர் 2017, 7:15 pm

DIN

அமெரிக்க அதிபர் டிரம்ப் மகள் இவாங்கா போல முகத்தோற்றத்தைப் பெற அமெரிக்கப் பெண்களிடையே போட்டாபோட்டி ஏற்பட்டுள்ளது. 
இதற்காக, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்களை நாடும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று அமெரிக்க ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவாங்கா போன்ற அகலமான கன்னங்கள், மெல்லிய மூக்கு, பெரிய கண்கள் வேண்டுமெனக் கூறி அமெரிக்க பெண்கள் பலர் மருத்துவமனையை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு முதல் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இதுதொடர்பாக ஆலோசனை பெற்றதாக கூறுகிறார் நியூயார்க்கைச் சேர்ந்த பிரபல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் நார்மன் ரோவ். 
இவாங்கா டிரம்ப் போன்ற தாற்காலிக முகத்தோற்றத்தைப் பெற ரூ.1,950 முதல் ரூ.26 லட்சம் வரை செலவழிக்க வேண்டியிருக்கும். நிரந்தரமாகவே அவரைப்போல இருக்க வேண்டும் என்றால் கன்னத்தில் இம்ப்ளான்டேஷன் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த சிக்கலான அறுவை சிகிச்சைக்கு, ரூ.32.5 லட்சம் வரை செலவிட வேண்டியிருக்கும் என்கிறார் நார்மன் ரோவ்.
அமெரிக்க தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ நட்சத்திரமான கெய்லி ஜென்னரின் முகத்தோற்றம் உலக அளவில் பிரபலமாக பேசப்பட்டது. அவரை பின்னுக்குத் தள்ளிவிட்டு அந்த இடத்தை இவாங்கா எளிதாகப் பிடித்துவிட்டார்.
"இவாங்கா முகம் வசீகரமாக இருக்கலாம். ஆனால் அதையும் தாண்டி அவர் மிகவும் சக்தி வாய்ந்த, தன்னம்பிக்கை கொண்ட குடும்பத்தின் அங்கமாகவும் திகழ்கிறார்' என்கிறார் அந்த மருத்துவ நிபுணர்.
என்ன விலை கொடுத்தாவது இவாங்காவின் முகத்தோற்றத்தை பெற்றே ஆக வேண்டும் என்ற வேட்கை அமெரிக்க பெண்களிடையே அதிகரித்து வருகிறது என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 
நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இவாங்கா முகத்தோற்றத்தைப் பெற டிஃபனி டெய்லர் என்ற பெண் விடாமுயற்சியாக 13 கட்ட அறுவை சிகிச்சை செய்து கொண்டார். "எனது லட்சியப் பெண் இவாங்கா போல மாற வேண்டும் என்பதே கனவு!' என்கிறார் டிஃபனி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.