வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

18 நாடுகளிலிருந்து 80 பேர் உளவுத் துறை மூலம் ரகசியக் கடத்தல்: துருக்கி துணை பிரதமர் அதிர்ச்சித் தகவல்

துருக்கியில் கடந்த 2016-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தொடர்பாக, 18 வெளிநாடுகளில் பதுங்கியிருந்த 80 துருக்கியர்களை உளவுத் துறையினர் ரகசியமாக நாடு கடத்தி வந்ததாக

News image
Updated On :6 ஏப்ரல் 2018, 12:55 am IST

துருக்கியில் கடந்த 2016-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தொடர்பாக, 18 வெளிநாடுகளில் பதுங்கியிருந்த 80 துருக்கியர்களை உளவுத் துறையினர் ரகசியமாக நாடு கடத்தி வந்ததாக அந்த நாட்டு துணைப் பிரதமர் பெக்கீர் போஸ்தாக்  தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ள இந்தத் தகவலை, வியாழக்கிழமை ஒளிபரப்பான தொலைக்காட்சி பேட்டியின்போது அவர் தெரிவித்தார்.
ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் தொடர்புடையாதாக 6 துருக்கியர்களை செர்பியா நாட்டின் கொசோவோ மாகாணத்திலிருந்து கடத்தி வந்த தகவல் வெளியானதையடுத்து, அந்த மாகாணத்தின் உள்துறை அமைச்சரும், உளவுத் துறை தலைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்தச் சூழலில் துணைப் பிரதமர் பெக்கீர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
ரகசியக் கடத்தல்கள் 18 நாடுகளில் நடத்தப்பட்டன என்று அவர் கூறினாலும், அந்த நாடுகளின் பெயரை பெக்கீர் குறிப்பிடவில்லை.
எனினும், இதுபோன்ற கடத்தல் வேலைகளில் துருக்கி உளவுத் துறை தொடர்ந்து ஈடுபடும் என்று அவர் தெரிவித்தார்.
துருக்கியில், ராணுவம் மற்றும் காவல்துறையின் ஒரு பிரிவினர் அதிபர் எர்டோகன் தலைமையிலான அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் கடந்த 2016-ஆம் ஆண்டில் ஈடுபட்டனர்.
எனினும், அந்த முயற்சியை அரசுப் படைகள் வெற்றிகரமாக முறியடித்தன. இந்த சம்பவத்தில் சுமார் 250 பேர் உயிரிழந்தனர்.
இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை அமெரிக்காவில் அடைக்கலம் புகுந்துள்ள மதத் தலைவர் ஃபெதுல்லா குலென் தூண்டி விடுவதாக துருக்கி குற்றம் சாட்டி வருகிறது. எனினும், அமெரிக்காவும், குலெனும் அந்தக் குற்றச்சாட்டை மறுத்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.