கொழும்பு: ராஜபட்ச பிரதமராகச் செயல்பட அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்கிவிட்டு, அப்பதவியில் ராஜபட்சவை நியமித்து, அதிபர் சிறீசேனா கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி நடவடிக்கை மேற்கொண்டார்.
ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் ராஜபட்சவின் முயற்சி தோல்வி அடைந்த நிலையில் அதிபர் சிறீசேனா நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, புதிய தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டார்.
இதற்கு எதிராக இலங்கை உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் வழக்கு தொடுத்தனர். அதில், சிறீசேனாவின் உத்தரவுகளுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதனிடையே, இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபட்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் இருமுறை நிறைவேற்றிய போதிலும், அவர் இதுவரை பதவி விலகவில்லை.
இதற்ககிடையில் அந்நாட்டு எம்.பி.,க்கள் 122 பேர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ராஜபட்ச பிரதமராக செயல்படவும், அமைச்சரவை கூட்டம் நடத்தவும் இடைக்காலத் தடை விதித்தது.
அத்துடன் ராஜபட்சவும், அவரால் அமைச்சராக நியமிக்கப்பட்டவர்களும், டிச., 12ம் தேதி நேரில் ஆஜராகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை!

விஜய் வென்ற விருதுகள்!

மருத்துவ உயர் சிறப்பு இடங்கள் ஒப்படைப்பு: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
தங்களை எதிர்த்து கேள்வி கேட்கும் இளைஞர்களை ஒடுக்கலாம் என அரசு நினைக்கிறது! - கனிமொழி கண்டனம்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



