

ஜப்பான் ராணுவ ஹெலிகாப்டர் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதில் விமானி பலியானார்.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
ஜப்பான் ராணுவத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் சஹா தன்னாட்சிப் பிரதேசத்தில் உள்ள கன்ஸகி நகரின் மீது பறந்தபோது திடீரென விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் இரண்டு விமானிகள் பயணம் செய்தனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் குடியிருப்புகளின் மீது விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 26 வயதுடைய துணை விமானி பரிதாபமாக இறந்தார். மற்றொரு விமானியை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில், குடியிருப்புகள் தீக்கிரையானது. இதில், உள்ளூரைச் சேர்ந்த சிறுமி ஒருவரும் காயமடைந்தார்.
விபத்து ஏற்பட்டதும் 14 தீயணைப்பு வண்டிகள் மற்றும் மூன்று அவசரகால ஊர்திகள் வரவழைக்கப்பட்டு மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.