போர்ட் மாரேஸ்பை: பப்புவா நியூகினியா தீவில் 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 20 பேர் பலியாகினர்
பசிபிக் பெருங்கடலில் உள்ள குட்டித் தீவான பப்புவா நியூ கினியாவின் ஹெலா மாகாணத்தில் திங்களன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம்7.5 ஆக பதிவாகியது. கடலுக்கடியில் 35 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கத்தின் விளைவாக பெரும்பாலான சாலைகள் மற்றும் வானுயர்ந்த கட்டிடங்கள் சேதம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெலா மாகாணத்தில் பெரும்பாலான இடங்களில் தொலை தொடர்புகள் முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தால் 20 பேர் வரை உயிரிழந்திருப்பதாகவும், 300 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவலால் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா... காலனி - முதல்பார்வை போஸ்டர் வெளியீடு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 93.32! 49 காசுகள் சரிவு!

அர்த்தமில்லாமல் பேசும் உதயநிதி தமிழிசை சௌந்தரராஜன் | BJP | DMK

மறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை! இபிஎஸ் விளக்கம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


