கூகுளில் 'முட்டாள்' என்று தேடினால் யாருடைய படம் வருகிறது தெரியுமா?: வெடித்தது  புதிய சர்ச்சை 

பிரபல தேடுபொறி தளமான கூகுளில் 'முட்டாள்' என்று தேடினால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் படம் தோன்றுவதன் மூலம் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.
கூகுளில் 'முட்டாள்' என்று தேடினால் யாருடைய படம் வருகிறது தெரியுமா?: வெடித்தது  புதிய சர்ச்சை 
Published on
Updated on
1 min read

சான் பிரான்சிஸ்கோ: பிரபல தேடுபொறி தளமான கூகுளில் 'முட்டாள்' என்று தேடினால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் படம் தோன்றுவதன் மூலம் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.

உலகின் பிரபல தேடுபொறி தளம் கூகுள். இதன் தேடல் மூலம் கிடைக்கும் பதில்களுக்கு பெரிய அளவில் நம்பகத்தன்மை உள்ளது. அதே சமயம் தேடலுக்கு கூகுள் உபயோகப்படுத்தும் 'அல்காரிதம்' தகவல்களை ஒழுங்கமைக்கும் விதத்தில் குறைபாடுகள் உள்ளது. இதன் காரணமாக நாம் விரும்பும் பதில்களை அதன் தேடல் முடிவுகளில் கொண்டு வர முடியும் என்பது அதன் மேல் சுமத்தப்படும் குற்றச்சாட்டாக உள்ளது.

இந்நிலையில் கூகுளில் 'முட்டாள்' என்று படப்பிரிவில் தேடினால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் படம் தோன்றுவதன் மூலம் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.

இந்த குழப்பமானது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் செயல்பாடுகளால் எரிச்சலடைந்த ஆன்லைன் செயல்பாட்டாளர்களின் கைங்கர்யம் என்று கருதப்படுகிறது. முதலில் 'ரெட்டிட்' என்ற இணைய தளத்தில் இவர்களொரு குழுவாக இணைந்து 'முட்டாள்' என்ற வார்த்தையை, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் படத்துடன் இணைக்கும் வேலையை தொடர் ஓட்டெடுப்பு மூலம் உருவாக்கினார்கள். இதனை ஒரு 'ஆன்லைன் போராட்டம்' என்ற அளவில் அவர்கள் தீவிரத்துடன் நடத்தினார்கள்.

இதன் விளைவாக கூகுள் உபயோகப்படுத்தும் ' அல்காரிதம்' இந்த தகவல்களை சேகரித்து வைத்துக் கொண்டு, யார் அந்த வார்த்தையை இட்டுத் தேடினாலும் ட்ரம்பின் படத்தைக் காட்டுகிறது.தற்பொழுது இது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

இதேபோல கடந்த மே மாதம் கூகுளின் தேடல் முடிவுகளில் 'பப்பு' என்ற இந்தி வார்த்தைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுலின் படமும், 'பேகு' என்ற இந்தி வார்த்தைக்கு பிரதமர் மோடியின் படமும் வெளி வந்தது சர்ச்சைக்குளானது. முன்னதாக ஏபல் மாதம் 'இந்தியாவின் முதல் பிரதமர்' என்ற கேள்விக்கும் மோடியின் படம் பதிலாக வந்தது. பின்னர் இந்த தவறை அந்நிறுவனம் திருத்திக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com