/

17 ஆண்டுகளுக்குப் பின்: 9/11 தாக்குதலில் இறந்தவரை அடையாளம் காட்டிய டிஎன்ஏ தொழில்நுட்பம்

சரியாக 17 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்காவில் 9/11 இரட்டை கோபுர தாக்குதலில் உயிரிழந்த இளைஞரின் அடையாளத்தைக் கண்டுபிடிக்கும் அளவுக்கு டிஎன்ஏ தொழில்நுட்பம் மாபெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது.

News image
Updated On :26 ஜூலை 2018, 9:17 am

PTI

சரியாக 17 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்காவில் 9/11 இரட்டை கோபுர தாக்குதலில் உயிரிழந்த இளைஞரின் அடையாளத்தைக் கண்டுபிடிக்கும் அளவுக்கு டிஎன்ஏ தொழில்நுட்பம் மாபெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது.

2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம்  நாள், அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்களை தலிபான் பயங்கரவாதிகள் விமானத்தை மோதச் செய்து தாக்கினர்.  இரட்டைக் கோபுர தாக்குதலில் பலியான 2,753 பேரில், 1,642வது நபராக பட்டியலிடப்பட்டவர் ஸ்காட் மைக்கேல் ஜான்சன். 26 வயது நிதித் துறை ஊழியரான ஜான்சனின் டிஎன்ஏவை சோதித்து, சரியான தகவல் தற்போது கிடைத்துள்ளது.

நிதித் துறை ஊழியராக பணியாற்றிய ஜான்சன், நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு, இரட்டைக் கோபுர தாக்குதலில் பலியானவர்களின் அடையாளத்தை கண்டுபிடிக்கும் டிஎன்ஏ சோதனையின் மூலம் அடையாளம் காணப்பட்ட முதல் நபர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சுமார் 1,100 பேர் அடையாளம் காணப்படாமலேயே உள்ளனர். இந்த டிஎன்ஏ சோதனை 89% அளவுக்கு துல்லியமான தகவலைத் தருவதால் விரைவில் இவர்களது அடையாளங்களும் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.