காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

கெளதமாலா எரிமலை வெடிப்பு: பலி எண்ணிக்கை 99-ஆக உயர்வு

மெக்ஸிகோவையடுத்த மத்திய அமெரிக்க நாடான கெளதமாலாவில், எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட பாதிப்புகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 99-ஆக உயர்ந்துள்ளது.

News image

ஃபியூகோ எரிமலையில் புதிதாக ஏற்பட்ட வெடிப்பு காரணமாக எழுந்த புகை மண்டலம்.

Updated On :8 ஜூன் 2018, 12:53 am IST

மெக்ஸிகோவையடுத்த மத்திய அமெரிக்க நாடான கெளதமாலாவில், எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட பாதிப்புகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 99-ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டின் தேசிய தடய அறிவியல் அமைப்பு வியாழக்கிழமை கூறியதாவது:
கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட ஃபியூகோ எரிமலை வெடிப்பு காரணமாக உயிரிழந்த 99 பேரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவற்றில், 28 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றார் அவர். 
அவ்வப்போது சீற்றத்தை ஏற்படுத்தி வந்த ஃபியூகோ எரிமலையில் திங்கள்கிழமை எதிர்பாராத பெருவெடிப்பு ஏற்பட்டது. அதற்கு முன்னதாகவே அந்தப் பகுதி மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தியும், அதற்கான நேரம் இல்லாததால் எரிமலைப் பிழம்பிலும், இடிபாடுகளிலும் பலர் புதையுண்டனர்.
இந்தச் சம்பவத்தில் சுமார் 200 பேர் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதிகாரிகள் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.