பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

முதல் முறையாக இஃப்தார் விருந்தளித்தார் டிரம்ப்

முஸ்லிம்களின் புனித மாதமான ரமலானையொட்டி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இஃப்தார் விருந்து அளித்தார்.

News image

இஃப்தார் விருந்தின்போது உரையாற்றிய டிரம்ப்.

Updated On :8 ஜூன் 2018, 12:54 am IST

முஸ்லிம்களின் புனித மாதமான ரமலானையொட்டி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இஃப்தார் விருந்து அளித்தார்.
அவர் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு வெள்ளை மாளிகையில் நடைபெற்ற முதல் இஃப்தார் விருந்து இது என்பது குறிப்பிடத்தக்கது.
தான் பதவியேற்றால் முஸ்லிம் நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு அகதிகள் வருவதைத் தடை செய்வேன் என்று அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது டிரம்ப் கூறினார்.
அதன்படி, ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகும் அதுதொடர்பான சில ஆணைகளைப் பிறப்பித்தார். மேலும், முஸ்லிம்களுக்கு எதிராக கருத்துகளை அவர் கூறி வந்ததாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 1990-களிலிருந்து ரமலான் மாதங்களில் ஆண்டுதோறும் அமெரிக்க அதிபர் மாளிகையில் அளிக்கப்பட்டு வந்த இஃப்தார் விருந்தை, டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு ரத்து செய்தார்.
இது, அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தச் சூழலில், அத்தகைய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அதிபர் மாளிகையில் இஃப்தார் விருந்துக்கு டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை ஏற்பாடு செய்திருந்தார்.
அப்போது வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவின் எதிர்கால வளத்துக்கும், பாதுகாப்புக்கும் முஸ்லிம் சமூகத்தினர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த விருந்தில் ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, துனீசியா, கத்தார், பஹ்ரைன், மொராக்கோ, அல்ஜீரியா, லிபியா, குவைத், காம்பியா, எத்தியோப்பியா, இராக், போஸ்னியோ போன்ற முஸ்லிம் நாடுகளின் தூதகரக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.