ஸ்டாக்ஹோம்: இந்த வருடம் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படாது என்று நோபல் பரிசு தேர்வுக்குழு ஒருமனதாக அறிவித்திருக்கிறது.
ஒவ்வொரு வருடம் இயற்பியல், வேதியியல், மருத்துவம் மற்றும் இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இது உலகின் துறை சார்ந்த உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த விருதுக்கான நபர்களை ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அமைந்துள்ள நோபல் பரிசு தேர்வுக்குழு கூடி முடிவு செய்து அறிவிக்கும்.
இந்நிலையில் இந்த வருடம் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படாது என்று நோபல் பரிசு தேர்வுக்குழு ஒருமனதாக அறிவித்திருக்கிறது.
இதுதொடர்பாக நோபல் பரிசு தேர்வுக்குழுவின் வாராந்திர கூட்டம் ஸ்டாக்ஹோமில் நடைபெற்றது.அப்பொழுது எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக அறிக்கை ஒன்று வெள்ளியன்று வெளியிடப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:
நோபல் பரிசு தேர்வுக் குழுவினர் சிலர் மீது தற்பொழுது பாலியல் ரீதியிலான குற்றச்சாட்டுகளும், பண முறைகேடு தொடர்பான புகார்களும் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு உரியவரை தேர்தெடுக்கும் நிலையில் தேர்வுக்கு குழு தற்பொழுது இல்லை என்று நினைக்கிறோம்.
மங்கி வரும் தேர்வுக்குழுவின் மீதான அபிப்ராயம் மற்றும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுளள நம்பிக்கை குறைபாடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
2018-ஆம் ஆண்டுக்கான விருது 2019-ஆம் ஆண்டு வழங்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப்போர் சமயமான 1943-ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்பொழுதுதான் விருதுகள் அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதிய சமூகநலத் திட்டத்துடன் தமிழகத்தில் தடம்பதித்த ரீகல் ஜூவல்லா்ஸ்
இன்றுமுதல் டிஎன்பிஎல் கிரிக்கெட்!

எல்ஐசியில் 6.5% பங்குகள் மத்திய அரசு விற்பனை

பாதை வசதி இல்லாத பத்தக்குடி ரயில் நிலையம்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



