எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

கஷோகியின் உடலை ஒப்படைக்க வேண்டும்

துருக்கியிலுள்ள சவூதி தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்ட செய்தியாளர் கஷோகியின் உடலை ஒப்படைக்க வேண்டும் என்று அவரது மகன்கள் சவூதி அரசை வலியுறுத்தியுள்ளனர்.

News image
Updated On :6 நவம்பர் 2018, 12:52 am IST


துருக்கியிலுள்ள சவூதி தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்ட செய்தியாளர் கஷோகியின் உடலை ஒப்படைக்க வேண்டும் என்று அவரது மகன்கள் சவூதி அரசை வலியுறுத்தியுள்ளனர்.
கொலைக்குப் பிறகு கஷோகியின் உடல் துண்டு துண்டாக வெட்டி அமிலத்தில் கரைக்கப்பட்டதாக துருக்கி அதிகாரிகள் கூறியுள்ள நிலையில், கஷோகி மகன்களின் இந்தக் கோரிக்கையால் சவூதி அரசுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கஷோகியின் மகன்களான சலா மற்றும் அப்துல்லா கஷோகி, சவூதி அரேபிய அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில், தங்களது தந்தையின் உடலை சவூதியில் புதைக்க விரும்புவதாகவும், அதற்காக அவரது உடலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த செய்தியாளர் ஜமால் கஷோகி, சர்ச்சைகள் காரணமாக சொந்த நாட்டிலிருந்து தப்பி அமெரிக்காவில் வசித்து வந்தார். அங்கு வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் கட்டுரைகள் எழுதி வந்த அவர், சவூதி அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், பட்டத்து இளவரசருக்கு எதிராகவும் கருத்துகளைத் தெரிவித்து வந்தார்.
இந்தச் சூழலில், துருக்கி நாட்டுப் பெண்ணை திருமணம் செய்ய விரும்பிய அவருக்கு, அந்த நாட்டுச் சட்டப்படி அவரது முன்னாள் மனைவியிடமிருந்து முறைப்படி விவாகரத்து பெற்றதற்கான சான்றுகள் தேவைப்பட்டன. அதனைப் பெறுவதற்காக அவர் துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்கு கடந்த மாதம் 2-ஆம் தேதி சென்றார். ஆனால், அதன் பிறகு அவரைக் காணவில்லை.
தூதரகத்துக்குள் அவரை சவூதி அனுப்பிய ஆட்கள் கொன்று விட்டதாக துருக்கி குற்றம் சாட்டியது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை ஆரம்பத்தில் மறுத்து வந்த சவூதி அரேபியா, 18 நாள்களுக்குப் பிறகு தங்களது துணைத் தூதரகத்தில் செய்தியாளர் கஷோகி கொல்லப்பட்டதை ஒப்புக் கொண்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.