
யவுண்டி:
ஆப்பிரிக்க நாடான கேமரூனில் துப்பாக்கி முனையில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 79 மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று கேமரூன். இங்கு தனி நாடு கேட்டு ஆங்கிலோ போன் என்னும் பயங்கரவாத இயக்கத்தினர் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் கேமரூனின் வடமேற்கு பகுதியின் தலைநகரான பமெண்டா அருகே நீவின் என்ற கிராமத்தில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளிக்குள் திங்களன்று துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் உள்ளே புகுந்தனர். அங்குள்ள மாணவர்கள் 79 பேர் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர் மற்றும் பள்ளி வாகன ஓட்டுநர் என 82 பேரை ஆகியோரை துப்பாக்கி முனையில் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.
கடத்தப்பட்ட 82 பேரும் எங்கு வைக்கப்பட்டுள்ளனர், தீவிரவாதிகளின் கோரிக்கைகள் என்ன என்பது போன்ற விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை. உடனே மாணவர்களைத் தேடும் பணியை கேமரூன் அரசு முடுக்கி விட்டது.
இந்நிலையில் துப்பாக்கி முனையில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 79 மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஆனாலும் மீதமுள்ள மூவரும் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளனர். அவர்களை மீட்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.