
சீனாவின் சின்ச்சியாங் பிரதேசம், ஆசிய மத்தியப் பகுதியின் குறுக்கே அமைந்துள்ளது. தீவிரவாதமும், பயங்கரவாதமும் சின்ச்சியாங்கிற்கு மாபெரும் சவாலாக அமைந்துள்ளன. இதற்கு மக்களின் மதிப்பு மிகு உயிரை விலையாகக் கொடுக்க வேண்டியுள்ளது. இவை எப்படி ஆரம்பித்தது? சீன அரசும் மக்களும் இதனை எப்படிச் சமாளிப்பார்கள்?
சின்ச்சியாங்கின் வளர்ச்சியே பயங்கரவாதத்தை தடுக்கும் ஆற்றல்
பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான சர்வதேச அனுபவங்களை ஆராய்ந்து பயன்படுத்தும் அடிப்படையில், சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் பயங்கரவாத எதிர்ப்பு பற்றிய முன் நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருகிறது.
இதன் மூலம், கடந்த மூன்று ஆண்டுகளில் சின்ச்சியாங்கில் பயங்கரவாத வன்முறைச் சம்பவங்கள் ஏதும் ஏற்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2019-ஆம் ஆண்டின் முதல் பத்து திங்களில், சின்ஜியாங்கிற்கு வருகை தந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 20 கோடியைத் தாண்டியுள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட இது சுமார் 43 விழுக்காடு அதிகமாகும். உள்ளூர் சமூகம் சீராகவும், நிதானமாகவும் வளர்வதை நிரூபிக்கும் உண்மையான சான்று இதுவாகும்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.