பணமோசடி செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில், மெக்சிகோவைச் சேர்ந்த போதைப்பொருள் கும்பல் தலைவன் எல் சாபோ கஜ்மன் குற்றவாளி என நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் உலகில், கடந்த கால் நூற்றாண்டாக அமெரிக்கக் காவல் துறைக்கு சவாலாக விளங்கிய எல் சாபோ கஜ்மன் (61) மீது பணமோசடி, ஆயுதங்களை வைத்திருந்தது தொடர்பாக வழக்குகள் பதியப்பட்டன. இவற்றின் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் கடந்த 3 மாதங்களாக விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த விசாரணையின்போது, கஜ்மனுக்கு எதிராக 56 பேர் சாட்சியம் அளித்தனர். அப்போது, தனக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்களை கஜ்மன் அடித்துத் துன்புறுத்தியதாகவும், சுட்டுக் கொன்றதாகவும், உயிருடன் எரித்துக் கொன்றதாகவும் அவர்கள் சாட்சி அளித்தனர். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் மீது செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்த நியூயார்க் நீதிமன்றம், கஜ்மனைக் குற்றவாளி என அறிவித்தது.
இது குறித்து, அமெரிக்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் முன்னாள் தலைவர் மைக் விஜில் கூறுகையில், போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவராக விளங்கியவர் கஜ்மன். அவரால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மிகப்பெரும் இழப்பைச் சந்தித்துள்ளன. அவருக்கு அளிக்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு, சட்டத்துக்குக் கிடைத்த வெற்றி என்றார்.
கஜ்மனுக்கான தண்டனை விவரங்கள் குறித்து வரும் ஜூன் மாதம் 25-ஆம் தேதி அறிவிக்கப்படும் என நியூயார்க் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதற்குப் பிறகு அவர், அதிகப்படியான பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கொலராடோ சிறையில் அடைக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று கஜ்மன் தரப்பு வழக்குரைஞர் தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தல், பணமோசடி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்த சினாலோவா கார்டெல் அமைப்பின் முன்னாள் தலைவராக கஜ்மன் இருந்துள்ளார். அமெரிக்க நாட்டுக்குள் போதைப்பொருள் கடத்தியது தொடர்பான மற்றொரு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அவர், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் பல முறை சிறைகளில் இருந்து தப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார் விஜய்!
தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது!

அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்!

சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு முதல்முறையாக நேரலை!
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

